கல்முனை ஸாஹிரா கல்லூரி விவகாரம்
--------------------------------------------------------------
லங்கா அசோக் லேலண்ட் கம்பனியின் தலைவர் டாக்டர் சிராஸ் மீராசாஹிபினால் கல்முனை ஸாஹிறா கல்லூரிக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த பஸ் வண்டியை பெற்றுக் கொள்வதில் கல்லூரி அதிபர், பழைய மாணவர் சங்கம் (கல்முனை), பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகிய மூன்று தரப்பினரும் இணக்கத்தை தெரிவிக்காமை அல்லது கால தாமதப்படுத்தப்பட்டமை (அக்கறை காட்டாமல்) காரணமாக அந்த பஸ்ஸை மல்ஹருஸம்ஸ் வித்தியாலயத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேற்குறித்த மூன்று தரப்பினரையும் சந்தித்த சில நலன் விரும்பிகள், பாடசாலைக்கு பஸ் ஒன்றைப் பெற்றுத் தர தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கான இணக்கக் கடிதங்களை வழங்குமாறும் கேடடுள்ளனர். இருப்பினும் கல்லூரி அதிபர், பழைய மாணவர் சங்கம் (கல்முனை), பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகிய மூன்று தரப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை காட்டாமை காரணமாக, அந்த பஸ்ஸை சாய்ந்தமருது மல்ஹருஸம்ஸ் வித்தியாலத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியதீன் கல்முனை ஸாஹிராவுக்கு 3 கோடி ரூபா செலவில் மாடிக் கட்டடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு முன்வந்திருந்த நிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.
இந்த விவகாரங்களின் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் உள்ளனவா அல்லது வேறேதுமா என்று தெரியவில்லை.
-ஏ.எச்..சித்தீக் காரியப்பர்
.

Wednesday, February 15, 2017
Home »
srilankan news
»
Related Posts:
காக்கா பிடித்தல் சகோதரன் ரனூஸ் அவர்களுக்கு....... அஸ்ஸலாமு அழைக்கும் தாருஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகம் சம்பந்தமாக நீங்கள் தவிசாளருக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் வாசிக்க கிடைத்தது அது தொடர்பில் உங்களிடம் கலந்து… Read More
SL's economic growth no threat to the region: PM Sri Lanka's future economic growth is not a threat to the region as it is playing a sub role in Asia’s development, Prime Minister Ranil Wickremesinghe said. He said this at… Read More
President Sirisena makes a request from Sri Lankan doctors living overseas Speaking in Parliament on Monday, December 5, during the debate on the expenditure heads for the Ministry of Health, President Maithri… Read More
*வில்பத்தும் வீதிக்கு வரவுள்ள வடக்கு முஸ்லிம்களும்* இலங்கை நாட்டில் இனவாதிகளுக்கு பேச வேறு பேசு பொருள் இல்லாவிட்டால் வில்பத்துவை கையில் எடுப்பது வழக்கமாகிவிட்டது.காலத்திற்கு காலம் இப் பிரச்சினை எழுந்து கொண்டே வருகிறது.மஹி… Read More
ஞானசாரர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை??? அமைச்சர் ரிஷாத் பாராளுமன்றத்தில் ஆவேசம்..!!! (அமைச்சின் ஊடகப்பிரிவு) சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் மோத விடும் வகையில் அப்பட்டமான விஷ… Read More
0 comments:
Post a Comment