தான் கோடிக்கு விலை போனவனல்ல,யாரால் மறுக்க முடியும்?
கடந்த அதிர்வு நிகழ்ச்சியில் மு.காவின் தவிசாளர் பஷீர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு கோடி வழங்கப்பட்டதாக பகிரங்கமாகவே கூறியிருந்தார்.மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவராவது தான் கோடிக்கு விலை போகவில்லை என மறுத்து பகிரங்கமாக ஊடகங்களில் கூற முடியுமா?
பாராளுமன்ற உறுப்பினருக்கு கோடி என்றால் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அதன் அரைப்பங்கு கிடைத்திருக்கும்.முஸ்லிம் சமூகத்தையே விலை பேசி கூறி விற்று நல்ல வியாபாரம் செய்துள்ளார்கள்.இவர்களின் வியாபாரத்தை அமைச்சர் றிஷாத் மைத்திரி பக்கம் மாறியமை கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்கள் பணம் வாங்கிக்கொண்டு மாறியதை இன்னுமொரு வகையில் கூறுவதானால் இவ்வரசு இவர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது எனலாம்.
இதனை இந் நேரத்தில் பஷீர் வெளியிடுவதன் நோக்கம் என்னவாக இருக்கும்? தனக்கு தரவில்லையென சிலர் சண்டை பிடிப்பார்கள்.இன்னும் சிலர் இவர்கள் என்ன மாதிரி ஆட்கள் என தங்களுக்குள் சலித்துக்கொள்வார்கள்.இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான ஒரு விடயம் உள்ளது.அது தான் தேர்தல் காலங்களில் பணம் கட்சி மாறுவதற்கு பணம் வழங்குதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.இவ்வாறான சட்ட ரீதியான சிக்கலுக்குள் மாட்டி விடுவது பஷீரின் திட்டமாக இருக்கலாம். பஷீர் என்ன சும்மா ஆளா?
அமைச்சர் ஹக்கீமிற்கு அழுத்தம் மேல் அழுத்தம் அதிகரிக்கும் என்பதில் மாத்திரம் சந்தேகமில்லை.
இப்படிக்கு
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)
.

Friday, February 3, 2017
Home »
srilankan news
»
Related Posts:
யார் முனாபிக்??? *************** நிந்தவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சிக்குள் இருக்கும் முனாபிக்களுக்கு தகுந்த பாடம் புகட்ட உள்ளதாக நசீர் அகமட் அவரது பாட்னர் றவூப் ஹக்கிம் ஆகியோர் மனவேதனையில் அடிக்கடி பேசினார்கள் இவர்… Read More
அட்டாளைச்சேனை மக்களுக்கு ஹசனலி தான் பிரச்சினையா? (abu rashath) அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படப் போகிறதென அறிந்தால் மாத்திரமே சாரணை வரிந்து கட்டுகிறார்கள்.தேசியப்பட்டியலானது சல்மானிடமுள்ள ஒவ்வொரு &n… Read More
ஹக்கீமிற்கு பஷீர் மோனியா (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் ஹக்கீம் ஒரு சிறு நேரம் மாத்திரமே மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் தவிர்ந்து வேறு விடயங்கள் பற்றி பேச… Read More
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்களுக்கு பதில் அளிக்கப்பட வேண்டுமா? அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற இனம் தெரியாத குழுவினரால் “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” எனும் புத்தகமானது வெளியிடப்பட்டிருந்தது.இப… Read More
தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜல்லிக்கட்டு தடை முரட்டுத் தனமாக துள்ளியோடும் காளையை அடக்கி அதன் கொம்பில்/கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருளை எடுத்துக்கொள்ளும் விளையாட்டே ஜல்லிக்கட்டு விளையாட்டாகும்.ஒரு காளையை பல … Read More
0 comments:
Post a Comment