Pages

.

.

Saturday, February 25, 2017

அமைச்சர் றிஷாத் வில்பத்து பிரச்சினையை  தேர்தலுக்காக கிளறுகிறாரா?

(இப்றாஹீம் மன்சூர்)

அமைச்சர் றிஷாத் வில்பத்து பிரச்சினை தேர்தலுக்காக கிளறுகிறாரா என்ற சந்தேகம் மு.காவின் ஆதரவாளர்கள் சிலருக்கும் அண்மையில் எழுந்த தேசியப்பட்டியல் பிரச்சினையால் அமைச்சர் றிஷாதை விட்டும் பிரிந்து சென்ற அ.இ.ம.காவின் முன்னாள் செயலாளருக்கும் அடிக்கடி எழுகிறது.இது தவிர்ந்த மற்ற அனைவரும் அமைச்சர் றிஷாதை வில்பத்து பிரச்சினைக்காக போராடும் ஒரு போராட்ட நாயகனாகவே பார்க்கின்றனர்.

அமைச்சர் ஹக்கீம் 2017-01-15ம் திகதி ஞாயிற்று கிழமை புத்தளத்தில் வைத்து வில்பத்து பிரச்சினையில் இனவாத பின்னணி உள்ளதாக பகிரங்கமாகவே கூறியிருந்தார்.தலைவர் ஏற்றுக்கொண்டும் ஆதரவாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமையின் காரணம் என்ன? அதுவும் இதில் மாத்திரம்? இதனை விட்டால் அமைச்சர் றிஷாத் வளர்ந்துவிடுவார் என்ற அச்சம் தான் இதற்காக காரணமாக ஊகிக்க தோன்றுகிறது.அண்மையில் தோன்றிய வில்பத்து பிரச்சினையின் போது அமைச்சர் றிஷாத்துடன் அசாத் சாலி,ஹிஸ்புல்லாஹ்,முஜீபுர் ரஹ்மான் என பல கட்சிகளை சேர்ந்த அரசியல் வாதிகளும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட பல சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்திருந்தன.இதில் மு.காவின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சாத் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் றிஷாத் இதனை அரசியலுக்காக பயன்படுத்தினால் அதனை இன்றைய அரசின் உயர் மட்டத்து தொடர்புகளை கொண்டுள்ள இவர்கள் அறியாமல் இருப்பார்களா?

கடந்த சில நாட்கள் முன்பு சூழலியலாளர் அமைப்பு ஊடாக மாநாடு ஒன்றை நடாத்தி இருந்தது.அம் மாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலாளர்களுக்கு பென் டிரைகள் வழங்கப்பட்டிருந்தன.அவ்வாறு வழங்கப்பட்ட பென் டிரைவ்களில் அமைச்சர் றிஷாதின் அமைச்சின் கீழ் உள்ள நுகர்வோர் அதிகார சபையின் சின்னம் பொறிக்கப்பட்ட இலட்சனைகள் கண்டிபிடிக்கப்பட்டிருந்தன.இதனை வைத்தே அமைச்சர் றிஷாத் திட்டமிட்டே இவ்விடயத்தை தேர்தல் காலத்தில் கிளறுகிறார் என்ற குற்றச் சாட்டை முன் வைக்கின்றனர்.வில்பத்து பிரச்சினை எழும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அமைச்சர் றிஷாதின் உயிர் சென்று வரும் என்பதுவே உண்மை.அது மாத்திரமல்ல இதன் மூலம் அவர் பேரின சமூகத்தின் எதிரியாகவும் மாறுகிறார்.இது அவரின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது.நிலை இவ்வாறுள்ள போது வில்பத்து பிரச்சினையை அமைச்சர் றிஷாத் கிளருவாரா? சாமானிய மக்களே! சற்று சிந்தித்து பாருங்கள்.

ஒரு ஸ்டிக்கரை ஒட்டி இலட்சனையை மறைத்து பென் டிரைவ்களை வழங்குவது மிகவும் ஆபத்தானது.அந்த ஸ்டிக்கர்கள் மிகவும் இலகுவான முறையில் கழற்றக் கூடியதாகவும் இருந்துள்ளது.அமைச்சர் றிஷாத் அவ்வாறு செய்திருந்தாலும் இந்தளவு பொடு போக்காக இருந்திருப்பாரா? நுகர்வோர் அதிகார சபையின் பென் டிரைவ்களை அமைச்சர் றிஷாத் ஊடகவியாலர்களுக்கு வழங்க முடியாது.இது தெரிய வந்தால் சட்ட ரீதியான சிக்கலுக்கும் உட்படும்.இன்று இது தொடார்பில் விமர்சிப்பவர்கள் நுகர்வோர் அதிகார சபையின் பென் டிரைவ்களை எவ்வாறு அமைச்சர் றிஷாத் ஊடகவியலாளர்களுக்கு வழங்க முடியும் என சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும்.ஏன் அவ்வாறு இன்று விமர்சிப்பவர்கள் யாரும் செல்லவில்லை?

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.வை.எல்.எ ஹமீத் தனது பதிவில் முறைப்பாடு செய்து ஒரு வாரமாகியும் அதனை கண்டு பிடிக்காமையை வைத்து அமைச்சர் றிஷாத் மீது குற்றம் சாட்ட முற்படுகிறார்.வை.எல்.எஸ் ஹமீத் அவர்களே! பொலிஸில் முறைப்பாடு செய்து அவர்கள் குற்றவாளியை கண்டு பிடிக்கவில்லையென்றால் அதற்கு அமைச்சர் றிஷாத் எந்த வகையில் பொறுப்பாவார்? இன்று பொலிசால் கண்டுபிடிக்கப்படாத குற்றச் சாட்டுக்களுக்கு முறைப்பாடு செய்தவர் தான் காரணம் என்று வை.எல்.எஸ் ஹமீத் கூற வருகிறாரா? அமைச்சர் றிஷாதை குற்றம் சுமத்த முனைந்து உங்கள் அறிவை கொச்சை படுத்த வேண்டாம்.

அமைச்சர் றிஷாத் பென் டிரைவ் கொடுக்க வேண்டும் என சிந்தித்திருந்தால் அதனை தனது சொந்தப் பணத்தில் மூலமே வழங்க வேண்டும்.அதற்கு நுகர்வோர் அதிகார சபையின் இலட்சினை பொறிக்க வேண்டியதன் அவசியமென்ன?

வை.எல்.எஸ் ஹமீத் தனது பதிவின் ஓரிடத்தில் பொது பல சேனா மீது அமைச்சர் றிஷாத் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகிறார்.இதனை தனது மனதில் ஏற்படத் கீறலாகவும் குறிப்பிடுகிறார்.இன்றும் அமைச்சர் றிஷாத் ஞானசார தேரருக்கு எதிரான முறைப்பாட்டில் நீதி மன்றம் ஏறி இறங்கி திரிகிறார்.பல முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளார்.இப்படி இருக்கையில் அமைச்சர் றிஷாத் பொது பல சேனா மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எப்படி கூற முடியும்? இது தனது மனதில் ஏற்பட்ட கீறலாக கூறுவதன் மூலம் பொது பல சேனாவிற்கும் அமைச்சர் ரிஷாதிற்கும் தொடர்புள்ளதாக கூற முற்படுகிறார்.அப்படியானால்,எதற்கு அங்கு பணி புரியும் ஊழியரை கொண்டு வட்டரக்க விஜித தேரர் தொடர்பான விடயத்தை பொது பல சேனாவிற்கு அறிவிக்க வேண்டும்?

உண்மையில் நடந்தது என்ன?

அமைச்சர் றிஷாத் அமைச்சராவதற்கு முன்பு இருந்த அமைச்சரின் காலத்தில் ஒரு குறித்த நிறுவனத்திடமிருந்து நுகர்வோர் அதிகார சபையினூடாக சில பென் டிரைவ்கள் ஓடர் செய்யப்பட்டுள்ளன.அந்த பென் டிரைவ்கள் சில காரணங்களுக்காக நுகர்வோர் அதிகார சபை பொறுப்பெடுக்கவில்லை.அந்த பென் டிரைவ்கள் அப்படியே அந் நிறுவனத்திடம் இருந்துள்ளன.குற்றம் சாட்டப்படும் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்கள் அந் நிறுவனத்திடம் சென்று பென் டிரைவ்களை வாங்கிய போது குறைந்த விலையில் நுகர்வோர் ஓடர் செய்து பொறுப்பெடுக்கப்படாத பென் டிரைவ்கள் விற்கப்பட்டுள்ளன.இதுவே நடைபெற்ற உண்மை சம்பவமாகும்.

அங்கு வழங்கப்பட்ட பென் டிரைவ்களில் நுகர்வோர் அதிகார சபையின் இலட்சனைகள் மாத்திரம் பொறிக்கப்பட்டிருக்கவில்லை.வேறு சில நிறுவனங்களின் பெயர்களும் பொறிக்கப்பட்ட பென் டிரைவ்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன.இதற்கான ஆதாரமும் எம்மிடம் உள்ளன.ஒரு அரச நிறுவனத்தின் பெயரை வைத்து அவ்வளவு இலகுவில் விளையாடி வெல்ல முடியாது.இதனை வைத்து சிந்தித்தால் இந்த விளையாட்டு இப்படித் தான் நடந்திருக்கும் என்பதை .எவ்வித சந்தேகமுமின்றி அறிந்து கொள்ளலாம்.

இதற்கு வை.எல்.எஸ் ஹமீத் எந்தெந்த விதத்தில் பதில் அளிப்பார் என்பது தெரியும்.அப்படி அவர் பதில் அளிப்பாராக இருந்தால் அதற்கு நாங்களும் பதில் அளிக்க தயாராகவே உள்ளோம்.


Related Posts:

  • அதிசயம் ஆச்சரியம்  நிந்தவூர் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இனைவு!!! மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு மக்கள் நம்பிய முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் றவூப் ஹக்கிம் இது வரை சமுதாயத்துக… Read More
  • Comments made on strike action over fines for traffic offences Here are some comments made on the strike action which took place in the recent days, against the proposed increase in fines for traffic offences. Minister … Read More
  • தாருஸ்ஸலாம் நீடிக்கும் மர்மமும்!! சமாளிப்பு பதில்களும் . தலைவர் ஹக்கீம் 29.01.2015 இல் கம்பனிப் பணிப்பாளராக நியமனம் பெறுகிறார். சரியாக ஒரு வாரத்தின் பின் 06.02.2015 இல் ஹாபிஸ் நசீர் தலைவரின் ஆசீர்வாதத்தோடு முதலமைச்சர் நியமனம… Read More
  • Gammanpila to sue Ranjan for defamation MP Udaya Gammanpila said today that he would send a letter of demand to Deputy Minister Ranjan Ramanayake demanding Rs. 500 million as compensation for allegedly making defamatory re… Read More
  • அமைச்சர் றிஷாதை தாக்க இனவாதிகளை நியாயப்படுத்திய வை .எல்.எஸ் ஹமீத் (இப்றாஹிம் மன்சூர்) நேற்று 2017-01-15ம் திகதி சக்தி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் அ.இ.ம.காவின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் கலந்த… Read More

0 comments:

Post a Comment