ஹக்கீமால் சீ.டி விடயத்தில் பஷீரிற்கு சவால் விட முடியுமா?
அமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம் பஷீர் பற்றி கதைப்பதே வாடிக்கையாகிவிட்டது.தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் தான் அவரின் வாய் இராத்தலுக்கான காரணமாக இருந்தது.தற்போது அந்த கதைகள் எல்லாம் மறைக்கப்பட்டு சீ.டியிற்கு மாற்றப்பட்டுவிட்டது.
அண்மையில் அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்ட பஷீர் அமைச்சர் ஹக்கீமின் தனிப்பட்ட சில விடயங்களை தொட்டிருந்தார்.அதன் பிறகு மு.காவைச் சேர்ந்த சிலர் அவர் மீது பாய்ந்த போது சீ.டி வெளியிடுவேன் என பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்த எச்சரிக்கை அமைச்சர் ஹக்கீமை மாத்திரம் சுட்டிக் காட்டாது இன்னும் பலரை சுட்டும் பாணியில் அமைந்திருந்தது.இதனை மாகாண சபை உறுப்பினர் தவத்தை தவிர அனைவரும் வாய் மூடி வேடிக்கை தான் பார்க்கின்றனர்.
இதனை வைத்து சிந்திக்கும் போது பலருடைய மர்மங்கள் அவரின் கைகளில் இருக்கலாம் என மக்கள் சிந்திக்க ஏதுவாக அமையும்.இதனை சம்பந்தப்பட்டவர்கள் ஏதோ ஒரு வழியில் நிரூபிக்க வேண்டும்.அதற்கு பெரிய வழிகளில் முயல தேவையில்லை.பஷீர் அமைச்சர் ஹக்கீமை நேரடியாக தாக்கியுள்ளதால் ”பஷீரிக்கு தைரியமிருந்தால் சீ.டியை வெளியிடு” என அமைச்சர் ஹக்கீம் ஒரு வார்த்தை கூறினால் போதும்.அல்லது பஷீர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுத்து அதனை நிரூபிக்க வேண்டும்.அல்லது ஏதோ ஒரு மேடைப்பேச்சுக்குக்களில் அமைச்சர் ஹக்கீம் தனது நக்கல் பாணியில் இதற்கு பதில் வழங்கினாலும் போதும்.
பஷீர் முன் வைத்துள்ள இக் குற்றச் சாட்டானது மிகக் கேவலமானது என்பதால் இலங்கை முஸ்லிம்களை தலைமை தாங்கக் கூடிய தலைமை ஏனையவர்கள் முன்பும் தலை நிமிர்ந்து செயற்பட தன் மீதுள்ள குற்றச் சாட்டுக்களை களைதல் அவசியமானது.இவ்விடயத்தில் மாகாண சபை உறுப்பினர் தவம் அதிகம் பஷீரிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.பஷீரின் எச்சரிக்கையின் பிரகாரம் அவர் மீது ஏதேனும் குற்றச் சாட்டுக்களை முன் வைக்க வேண்டும்.இவ் வகையில் நோக்கும் போது பஷீரும் வாய்ச் சாடல் காட்டுகின்றார் என்றும் நினைக்க தோன்றுகிறது.
பஷீர் முதலில் மாகாண சபை உறுப்பினர் தவத்தை அடக்குவாரா? தவத்தின் தைரியத்தை பார்க்கின்ற போது அவர் மீதான பிடிகள் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது
இப்படிக்கு
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)
.

Thursday, February 2, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஞானசேர தேருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன் பொலீஸ் தலைமையத்தில் முறைப்பாடு. . இன்று 03.12.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுத… Read More
மு.காவின் உயர் பீட ஊஞ்சல் விளையாட்டு மு.காவின் உயர் பீட கூட்டமொன்று நடைபெறப் போகும் தினம் அறிவிக்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம் அரசியல் களமே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.வழமை போன்று 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர் பீடக் கூட்… Read More
தாருஸ்ஸலாம் வெளியே வந்தது, அடுத்த மர்ம முடிச்சு "தலைவரின் படு கொலை" பசீர் சேகு தாவூத் தயாரா? அஸ்மி ஏ கபூர் தாருஸ்ஸலாம் என்கின்ற கட்சியினர் தலைமையகம் எவ்வாறு இன்று பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு இன்று தனது சொந்த வீ… Read More
முதல் இடத்தை பிடித்த பிரதி அமைச்சர் ஹரீசின் ஊடக விளம்பரம் ................................................... (நியாஸ் கலந்தர்) அண்மையில் காணமல் போன மீனவர்கள் சம்பந்தமாக பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு கல்முனை மீனவர் சங்கம் கண்ட… Read More
அமைச்சர் றிஷாதை தாக்க இனவாதிகளை நியாயப்படுத்திய வை .எல்.எஸ் ஹமீத் (இப்றாஹிம் மன்சூர்) நேற்று 2017-01-15ம் திகதி சக்தி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் அ.இ.ம.காவின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் கலந்த… Read More
0 comments:
Post a Comment