Pages

.

.

Sunday, February 26, 2017

சாய்ந்தமருது மக்களின் கனவுடன் விளையாட வேண்டாம்

ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து வை.எல்.எஸ் ஹமீத் சாய்ந்தமருது மக்களின் பல நாள் கனவான சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் கை வைத்துள்ளார்.இவரின் அறிக்கை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை தடுக்கும் சிந்தனையை விதைக்கும் வகையில் அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.சகோதரர் வை.எல்.எஸ் ஹமீத் அவர்கள் சாய்ந்தமருது மக்களுக்கு இந்த துரோகத்தை ஒரு போதும் செய்து விட வேண்டாம்.சாய்ந்தமருது மக்களுக்கு துரோகம் செய்வது இவருக்கொன்றும் புதிதல்ல.இவர் சாய்ந்தமருதின் எல்லையை மாற்றியதன் பிரதான சூத்திரதாரியாக கருதப்படுபவர்.இதனை ஏன் செய்தார் போன்ற விளக்கங்களை இன்னுமொரு கட்டுரையினூடாக தெளிவுபடுத்த எண்ணியுள்ளேன் (இன் சா அல்லாஹ்).

அண்மையில் அ.இ.ம.காவினுடையை தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் அமீர் அலி,அரச வர்த்தக கூட்டு தாபனத்தின் தலைவர் ஜெமீல் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக சாய்ந்தமருது மக்கள் மிக விரைவில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக்கொள்வார்கள் என்பது உறுதியாகியுள்ளது.இது நடைபெற்றால் சாய்ந்தமருதை அமைச்சர் றிஷாத் மிக இலகுவாக கைப் பற்றுவார்.அமைச்சர் றிஷாத் சாய்ந்தமருதை கைப்பற்றினால் அம்பாறை மாவட்டத்தை வீழ்த்துவது அவருக்கு மிக இலகுவாகிவிடும்.இதனை தடுக்கும் நோக்கிலேயே வை.எல்.எஸ் ஹமீத் இவ்வாறான விடயங்களை கூறி தடுக்க முனைவதாக ஊகிக்க முடிகிறது.

இத்தனை காலமும் அமைதியாக இருந்த வை.எல்.எஸ் ஹமீத் தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இவர் இத்தனை காலமும் எங்கிருந்தார்? சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கை நியாயமானதா? என பல இடங்களில் விவாதிக்கப்பட்டு மக்களின் ஆணையை பெற்ற அனைத்து அரசியல் வாதிகளும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அப்போதெல்லாம் இவர் வாய் மூடி மௌனமாக இருந்துவிட்டு இப்போது கொதிப்பதன் மர்மம் என்ன? இவரின் பின்னணியில் அ.இ.ம.காவின் எதிரிக் கட்சியின் பின்புலம் உள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.எது எவ்வாறு இருந்தாலும் சாய்ந்தமருது மக்களுக்கு துரோகமிழைக்கும் இவ்வாறான பேச்சுக்களை வை.எல்.எஸ் ஹமீத் தவிர்க்க வேண்டும்.

அல்-ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ் (சாய்ந்தமருது)

Related Posts:

  • தாருஸ்ஸலாம் வெளியே வந்தது, அடுத்த மர்ம முடிச்சு "தலைவரின் படு கொலை" பசீர் சேகு தாவூத் தயாரா? அஸ்மி ஏ கபூர் தாருஸ்ஸலாம் என்கின்ற கட்சியினர் தலைமையகம் எவ்வாறு இன்று பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு இன்று தனது சொந்த வீ… Read More
  • ஞானசேர தேருக்கு  எதிராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய  தலைவர் றிஷாட் பதியுத்தீன் பொலீஸ் தலைமையத்தில் முறைப்பாடு. . இன்று 03.12.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுத… Read More
  • Parliament to debate on new Constitution Sri Lankan parliament will have a three-day debate in January on the proposals for a new Constitution, Leader of the House Lakshman Kiriella said. Sri Lanka sponsored the resolutio… Read More
  • முதல் இடத்தை பிடித்த பிரதி அமைச்சர் ஹரீசின் ஊடக விளம்பரம் ................................................... (நியாஸ் கலந்தர்) அண்மையில் காணமல் போன மீனவர்கள் சம்பந்தமாக பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு கல்முனை மீனவர் சங்கம் கண்ட… Read More
  • மு.காவின் உயர் பீட ஊஞ்சல் விளையாட்டு மு.காவின் உயர் பீட கூட்டமொன்று நடைபெறப் போகும் தினம் அறிவிக்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம் அரசியல் களமே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.வழமை போன்று 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர் பீடக் கூட்… Read More

0 comments:

Post a Comment