Pages

.

.

Monday, February 13, 2017

பேராளர் மாநாட்டின் தீர்மானங்கள்

(இப்றாஹிம் மன்சூர்:கிண்ணியா)

மு.காவின் பேராளர் மாநாடுகளில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழமை.இம் முறையும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

மு.காவின் பேராளர் மாநாடு ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட வேண்டும் என்பதால்,குறித்த பேராளர் மாநாட்டில் அவ் வருடத்தில் மு.கா செய்த சாதனைகள்,அணுகுமுறைகளை தொடர்பில் ஆராய்வதற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இம் முறை பேராளர் மாநாடு இடம்பெற்ற குறித்த தினம் மு.கா இவ்வருடம் செயற்படுத்திய திட்டங்கள்,நடாத்திய சேவைகள் தொடர்பில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.இது அவர்கள் இவ்வருடம் செய்தவைகள் பற்றியே கூறியிருந்தன.உண்மையில் இவ் ஆவணப்படத்தில் கடந்த பேராளர் மாநாட்டின் போது இடம்பெற்ற தீர்மானங்கள் தொடர்பில் கட்சி மேற்கொண்ட செயற்பாடுகளை ஆராய்வதே மிகவும் பொருத்தமானது.

குறைந்தது மு.காவின் தலைவராவது தனதுரையில் இது பற்றிய ஒப்பீடுகளை செய்திருக்க வேண்டும்.அவரது உரை பஷீர் சேகு தாவூதை இகழ்வதையே பிரதானமாக  கொண்டிருந்தது.பஷீர் சேகுதாவூதை தானே நீக்கி விட்டார்கள்.இன்னும் எதற்கு அவர் பற்றிய பேச்சு? ஒவ்வொரு வருடமும் தீர்மானம் நிறைவேற்றுவதில் பயனில்லை.அதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராய வேண்டுமல்லவா?

ஒவ்வொரு வருடமும் நிறைவேற்றி வந்த கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை இம் முறை காண முடியவில்லை.இதனை பார்க்கும் போது மு.கா தனது மிகப் பெரும் கொள்கையில் இருந்து (அஷ்ரபின் கனவிலிருந்து) மாறிவிட்டதா என்ற சிந்தனை தோன்றுகின்றது.கடந்த முறை நிறைவேற்றிய ஓரிரு தீர்மானங்கள் இம் முறையும் நிறைவேற்றப்பட்டிருந்தன.அதனை மீள இணைக்க முடியுமாக இருந்தால் ஏன் இதனை மீள இணைக்க முடியாது?


Related Posts:

  • சமுதாயத்துக்காக துணிந்து அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,,.... அன்று முஸ்லிம் சமுதாயம் அரசியல் அனாதைகளாக இருந்ததை உணர்ந்த மறைந்த தலைவர் அஸ்ரப் தனது சமுகத்தின் விடிவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியை ஆரம்ப… Read More
  • குவைதிர்கானின் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயல்  தொடர்பான குற்றச் சாட்ட்டின் உண்மை முகம் அமைச்சர் றிஷாதை ஏசுவதற்காகவே மு.காவினால் நிரந்தர கொந்தராத்து வழங்கப்பட்டிருக்கும் குவைதிர்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள … Read More
  • கண்டியாப்பால் கதிகலங்கி நிற்கும் றவூப் ****************  ##ஹக்கீம் ************** கண்டியில் நடைபெற்ற பேராளர் மாகாநாட்டில் பெளத்து வரை கட்சியின் தலைவனாக இருக்க வேண்டும் என்று யாப்பில் செய்த மாற்றம் இன்று கட்சியை அழிவுப… Read More
  • மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம… Read More
  • President seeks explanation on IGP's phone call President Maithripala Sirisena told Parliament today that he had called for an explanation from IGP Pujith Jayasundara regarding a video in which he had been reportedly spea… Read More

0 comments:

Post a Comment