Pages

.

.

Saturday, February 11, 2017

முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீம்
ஹஸன் அலியின் கோரிக்கை நிராகரிப்பு!
---------------------------------------------------------------
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (11) நடைபெற்ற போது நாளைய (12) பேராளர் மகாநாட்டில் பரிந்துரை செய்து ஏற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.

இதன்போது, கட்சியின் தவிசாளர் பதவிக்கு எம்.ரி. ஹஸன் அலியின் பெயர் உயர்பீட உறுப்பினர்கள் பலரால் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஹஸன் அலி முற்றாக மறுத்து, நிராகரித்துள்ளார்.

இந்த நிலையில்,அதிகாரமிக்க செயலாளர் பொறுப்பை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்தும் மன்சூர் ஏ காதரே அதிகாரபூர்வ செயலாளராக செயற்படுவார் என தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, தான் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கப் போவதாகவும் தனக்கு எவ்வித பதவிகளும் இனித் தேவை இல்லை எனவும் தெரிவித்து இறுதிக் கட்டத்தில் ஹஸன் அலி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு பிரதிச் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அலி ஸாஹிர் மௌலானா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமே தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயற்பட வேண்டுமென உயர்பீட உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவித்ததனையடுத்து அல்லாஹு அக்பர் என கூறப்பட்டு அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


Related Posts:

  • தெரண 360    ########## வில்பத்துவின் உண்மையை சகோதர சிங்கள இனத்திற்கும் புரியவைக்கும் #தெரண TV யின்  #நிகழ்தி  "360" #நாளை (2017.01.09) #இரவு 10.30 மணிக்கு கானத்தவராதீர்கள்... … Read More
  • Lieutenant drowns in Kala Oya A 42-year-old Lieutenant attached to the Mullikulam navy camp has drowned while bathing in Kala Oya, Ada Derana reporter said. The Lieutenant and a group of sailors had attended a party held … Read More
  • முஸ்லிம் சமூகத்தை பிரிக்க ரங்கா களத்தில் (அபு றஷாத்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கா மகாராஜா நிறுவனத்தால் இயக்கப்படும் சக்தி தொலைக்காட்சியினூடாக மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பிரிக்கும் கைங்கரியத்தில்   களமிறங்கியுள்… Read More
  • No traffic fine increase: President assures bus Associations Private Bus Associations said today President Maithiripala Sirisena assured them that there would be no traffic fine increase without consulting relevant parties.… Read More
  • Parliament to debate on new Constitution Sri Lankan parliament will have a three-day debate in January on the proposals for a new Constitution, Leader of the House Lakshman Kiriella said. Sri Lanka sponsored the resolutio… Read More

0 comments:

Post a Comment