மயிலின் வளர்ச்சியால் கருகி சாகும் மரங்கள்
மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்துக்காக அம்பாறை மாவட்ட மக்களின் முழு ஆதரவுடன் பல போராட்டத்துக்கு மத்தியில் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சி அதன் குறுகிய கால வாழ்வில் முஸ்லிம் சமுதாயத்தை கௌரவப்படுத்தியது என்பதை யாரும் மறக்க முடியாது
தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது அரசியல் வாழ்க்கையில் முஸ்லிம் சமுதாயத்தின் நிலதொடர்பான இருப்பிட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார் ஆனால் அவரின் இலட்சியம் நிறைவேறுவதற்கு முதல் விமான விபத்தில் உயிர் இழந்தார் (இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜஹுன் )அன்னாரின் இழப்பை சிலர் சந்தோஷத்துடன் வரவேற்று இன்று சொகுசா வாழ்ந்து கொண்டு அரசியல் செய்கின்றனர் என்பது மக்கள் அறிந்த உண்மை அதனால் பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது அந்த சரித்திரத்தில் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் மர்மம் கூட மறைந்து கிடக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்
அஸ்ரப் அவர்கள் மறைவுக்கு பின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் செய்யாத சட்டத்தரனி றவூப் ஹக்கிம் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் முஸ்லிம் காங்கிரஸ் அஸ்ரப் அவர்களின் கொள்கையை மறந்து #ஹக்கிம் #காங்கிரஸ் என்ற கட்சியாக மாறிவிட்டது அதனால் ஹக்கிம் நினைத்தபடி கட்சி இஸ்லாத்துக்கு மாறாக பயனிக்கிறது இதனால் மறைந்த தலைவரின் மரணத்தின் காரணத்தை கூட அறிந்திட விரும்பாத தலைவனின் கையில் முஸ்லிம் காங்கிரஸ் சிக்கியுள்ளது அதனால் ஹக்கிம் தலைமை பதவியில் இருக்கும் வரை அஸ்ரப் அவர்களின் மரணம் பற்றி விசாரணை செய்ய அரசை யாரும் கோர முடியாத நிலையே காணப்படுகின்றன
எனவே மறைந்த தாலைவரின் கொள்கையை நிலை நாட்டி அவரின் மரணத்தின் காரணத்தை மக்கள் அறிவது என்றால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ஹக்கிமை நீக்க வேண்டும் ஆனால் அது கொஞ்சம் கஸ்டமான காரியம் இருந்தும் அம்பாறை மக்கள் போராடினால் வெற்றியடையலாம் அந்த போராட்டம் மிக விரைவில் நடைபெறும் சூழ் நிலை அம்பாறை மாவட்டத்தில் நிலவுகிறது
மறைந்த தலைவரின் காலத்தில் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் ஒற்றுமையாக அரசியல் செய்தனர் சமுதாயத்தின் நலனில் அக்கரை செலுத்தினார்கள் மக்களால் முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்மப்பட்டது ஆனால் அந்த நிலை இன்று தலை கீழாக மாறியுள்ளது
கடந்த 16 வருடமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நம்பிய சமுதாயம் ஏமாற்றம் அடைந்து நிற்கிறது அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை குறிப்பிடலாம் இந்த மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளான காணி நீர்ப்பாசனம் இருப்பிடம் தொழில் வீதி என்று இருக்கும் போது மக்களுக்கு பிரயோசனம் இல்லாத அடிக்கல் கலை விழா என்பன நடாத்தி மக்களை ஏமாற்றும் அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருவதால் அரசியல்வாதிகளே பிரயோசனம் அடைகின்றனர்
இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு இனவாதிகளால் பால அச்சுருத்தல் ஏற்படுகின்றன அதனால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாண்மையாக வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையராக வாழும் நிலை வரலாம் அதற்கான அத்திவாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மானிக்கமடுவில் இடபட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்
மானிக்கமடு சிலை விடயத்துக்கு ஒரு வாரத்தால் முடிவு என்று அறிக்கை விட்ட ஹக்கிம் இன்று பல மாதமாகியும் தீர்வு பெற்றுத்தரவில்லை இதனால் அம்பாறை மக்களை அழிக்க வேண்டும் என்று இனவாளதிகளோடு மறைமுகமாக இனைந்து ஹக்கிம் செயல்படுகிறாரா?? ?என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர் அப்படி நினைத்தாலும் தப்பு இல்லை என்று தான் கூற வேண்டும்
இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அரசியல் என்பது முஸ்லிம் சமுதாயத்துக்கு ஒரு சாபக்கேடாக மாறியுள்ளது என்பதை மக்கள் 16 வருடத்துக்கு பிறகு உணர்ந்துள்ளனர் அதனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய மண்ணில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மக்கள் அழிக்க தீர்மானம் எடுத்து விட்டனர் அதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அதை பலப்படுத்த மக்கள் அனிதிறண்டுள்ளனர்
அதிலும் குறிப்பாக பல சகாப்தங்களாக ஹக்கிமால் தேசியப்பட்டியல் என்ற போர்வையில் ஏமாற்றபட்டு வரும் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் இனியும் ஹக்கிமின் பொய் வாக்குறுதியை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்பது உறுதியாகி விட்டது அதனால் எதிர்வரும் காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேசம் மக்கள் காங்கிரஸின் மயில் சோலையாக கட்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை இதனால் எதிர்வரும் உள்ளுராச்சி தேர்தலில் மக்கள் காங்கிரஸின் மயில் அம்பாறை மாவட்டத்தில் அதிக பிரதேச சபைகளின் ஆட்சியை கைப்பற்றும் என்பது உறுதியாகி விட்டது இது சானக்கியத்துக்கும் நன்கு தெரியும் இதனால் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக பல பொய் குற்றச்சாட்டுக்களை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து வருகிறார் அது ஒன்றும் மக்களிடையே எடுபடவில்லை அதனால் இப்போது வீட்டிலிருந்து வடிவேலின் ஜோக்கை பார்த்து இரசித்து வாழ்கிறார் அதனால் விரைவில் இலங்கை வடிவேல் என மக்கள் பட்டம் சூட்டவுள்ளனர் இதனால் தலைவன் என்ற நாமம் மிக விரைவில் மறைந்து விடும்
அம்பாறை மாவட்ட மரங்கள் மயிலின் இறகுகளால் புடைசூழப்பட்டுள்ளது என்பதை அறிந்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய அரசியல்வாதிகள் மக்கள் காங்கிரஸில் இனைய ஆர்வம் கொண்டு வருகின்றனர் அவர்களின் முயற்சியால் எதிர்வரும் மாதம் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மக்கள் விரும்பும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது அதில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய போராளிகள் இனையவுள்ளனர்
எனவே இன்று முஸ்லிம் சமுதாயத்துக்கு வீரமுள்ள சத்திய தேசிய தலைவராக அமைச்சர் றிசாத் அவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுள்ளது அதனால் அமைச்சர் றிசாத் அவர்களின் கரத்தை பலப்படுத்த முஸ்லிம் சமுதாயம் முன் வந்து இருப்பதை பாரட்ட வேண்டும்
மறைந்த மாமனிதர் அஸ்ரப் அவர்களின் பொண் முகத்தோடு புன்னகை சிரிப்புடன் துணிந்து பேசும் சத்திய தேசிய தலைவனின் வருகையை அம்பாறை மாவட்ட மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்
ஜெமீல் அகமட்
அ.இ.ம.கா .பொத்துவில் தொகுதி
கொள்கை பரப்பு செயலாளர்
.

Tuesday, December 27, 2016
Home »
srilankan news
»
Related Posts:
Cyclone Vardah: Flight operations resume at Chennai airport A day after Cyclone ‘Vardah’ ripped through Chennai, the city presented a scene of devastation with thousands of uprooted trees, broken billboards and snapped tel… Read More
பிரதி அமைச்சர் ஹரீஸ் எனது கருத்தை ஏற்றார் (இப்றாஹீம் மன்சூர்) சில நாட்கள் முன்பு நான் “பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலைதீவு சென்றிருக்க தேவையில்லை” என்ற கட்டுரையை எழுதியிருந்தேன்.அக் கட்டுரையில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த &n… Read More
புத்தளத்தில் மினி தாருஸ்ஸலாம்,கிழக்கில் பொடி தாருஸ்ஸலாம் அமைக்கப்படுமா? சில நாட்கள் முன்பு மு.கா புத்தளத்தில் தாருஸ்ஸலாம் கிளை அலுவலகம் ஒன்றை அமைத்திருந்தது.இது 24மணி நேரமும் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டமையே அதன் சிறப்பம்சமா… Read More
வை.எல்.எஸ் ஹமீத் சிந்திப்பாரா? (அபு றஷாத் ) நான் அ.இ.ம.காவின் தலைவர் அமைச்சர் றிஷாதின் ஆதரவாளனல்ல என்ற விடயத்தை முதலில் கூறிக்கொண்டு சில விடயங்களை வை.எல்.எஸ் ஹமீத் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். நாளை நீங… Read More
SL's economic growth no threat to the region: PM Sri Lanka's future economic growth is not a threat to the region as it is playing a sub role in Asia’s development, Prime Minister Ranil Wickremesinghe said. He said this at… Read More
0 comments:
Post a Comment