Pages

.

.

Sunday, December 18, 2016

அஷ்ஷஹீத் அஷ்ரப் தன்னை விளம்பரப்படுத்த சேவைகள் செய்தாரா?
"""""""""""""""""""""""""""""""""""
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மாமனிதர் அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்கள் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் நாடுபூராகவும் தனது ஆளுமையினால் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை இன மத வேறுபாடுகள் இன்றி செய்து காட்டினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம், துறைமுகம், நெடுஞ்சாலைகள், பாடசாலைக்கட்டிடங்கள், வீதிகள், மின்சார வசதிகள், வைத்தியசாலைகள், குடிநீர் வசதிகள், சந்தைகள், மீள்  குடியேற்ற கிராமங்கள் என அடிக்கிக்கொண்டே போகலாம்.

பல்லாயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்களும் அவரினால் வழங்கப்பட்டுள்ளன.

அவரின் அபிவிருத்திப்பணிகள் நேற்றும் இன்றும் நாளையும் மறக்கமுடியாத சாதனைமிக்க அபிவிருத்திப்புரட்சியாகவே அமைந்துள்ளது எனலாம்.

ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருந்து கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்கள் பதினேழு வருட காலமாக பல அமைச்சுக்களை வைத்துக்கொண்டு அபிவிருத்திப்பணிகள், வேலைவாய்ப்புக்கள் எதுவுமே செய்யாமல் தூங்கிக்கொண்டு இருந்துவிட்டு

வசந்தம் தொலைக்காட்சியின் "அதிர்வு"  நேரடி நிகழ்ச்சியிலே இன்று (2016.12.18) அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்கள் அன்று தான் கட்டிய கட்டிடங்களுக்கு தனது பெயரைச்சூட்டி தன்னை விளம்பரப்படுத்தி அன்று அரசியல் செய்தார்.

இதன் மூலம் அவர் தவறு செய்தவர் என்றே தன்னால் கூற முடியும். என்று கூறியுள்ளார்.

தான் இப்படிச்செய்வதை விரும்பாதவன் என்றும் ஆணித்தரமாக தனது கருத்தை அடித்துக்கூறினார்.

இக்கருத்தின் மூலம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் ஒரு ஐக்கிய தேசிய கட்சியின் தொப்புள்கொடி உறவுக்காரன் என்பதை மீண்டும் நிரூபீத்துக்காட்டியுள்ளார்.

போராளிகளே சிந்தியுங்கள் அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்களை இன்றைய தலைவர் குற்றம் சுமத்தியதை  உங்களால் ஜீரணிக்க முடியுமா?


Related Posts:

  • *பட்டிக்காட்டான்* தனது பக்கத்து ஆசனத்திற்கு “யார் வரப்போறானோ?” என்ற சிந்தனையில் தனதூரிற்கு செல்ல இரவு எட்டு மணி பஸ்ஸில் ஏறிய அஜ்வத்தின் உள்ளம் மிகுந்த எதிர்பார்ப்போடிருந்தது. “நானா..!! இந்த சீட்ட யாரு புக் பண்ணிருக்காங்க?” … Read More
  • பேராளர் மாநாட்டின் தீர்மானங்கள் (இப்றாஹிம் மன்சூர்:கிண்ணியா) மு.காவின் பேராளர் மாநாடுகளில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழமை.இம் முறையும் சில தீர்மானங்கள் நிற… Read More
  • ஹக்கீம் தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தாரா? நேற்று கூடிய மு.காவின் உயர் பீடம் பஷீர் சேகு தாவூதை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருந்தது.இதனை வைத்து ஹக்கீம் தன்னை குற்றமற்றவராக நிரூபித்துள்ளார் என்ற வகையில் பலரும் கருத்… Read More
  • மஷூறா அடிப்படையிலான கட்சித் தீர்மானங்கள் மு.கா யாப்பின் 3.1 ஆனது *“கட்சித் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதி உயர் அங்கம் கட்சியின் உயர்பீடமாகும்.அதன் தீர்மானங்கள் எல்லாம் கருத்தொருமைப்பாட்டின் (மஷூரா) அடிப்படையில் மஷூறா சபையின் … Read More
  • ஆடத் தெரியாதவன் அரங்கை கோணல் என்டானாம் என்ற கதை போன்றே மாகாண சபை உறுப்பினர் நஸீரின் பேச்சு அமைந்துள்ளது வன்னியின் ஒளி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் நஸீர் அமைச்சர் றிஷாத் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்ற… Read More

0 comments:

Post a Comment