.

Tuesday, June 6, 2017
Home »
srilankan news
»
அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலில் தவத்துக்கே அதிகம் அக்கறை
( ஹபீல் எம்.சுஹைர் )
அமைச்சர் ஹக்கீமின் பகிரங்கமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் இன்னும் கனவாகவே உள்ளது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதில் அமைச்சர் ஹக்கீமுக்கு எந்த விதமான சிறு பிரச்சினைகளும் இல்லாத போதும் ( தற்போது ஹசனலியின் தடையுமில்லை ) இன்னும் அதனை இழுத்தடிப்பு செய்தே வருகிறார்.
இந்த இழுத்தடிப்பின் பின்னால் அமைச்சர் ஹக்கீமுக்கும் சல்மானுக்கும் இடையில் உள்ள மறைமுக ஒப்பந்தம் இருப்பதான கதைகள் இருப்பதோடு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மு.கா முதலமைச்சரை பெற்றுக்கொள்ளாது போனால் நஸீர் ஹாபிசுக்கு அதனை வழங்கி பாராளுமன்றம் அனுப்பி வைத்தல் போன்ற பல பல விடயங்கள் உள்ளன. இவற்றுக்கு பின்னாலேயே அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் வழங்கப்படும். பாவம் அட்டாளைச்சேனை மக்கள். பல காலமாக முஸ்லிம் காங்கிரசை ஆதரித்து வருகின்ற போதும் பலர் நுகர்ந்த எச்சியைத் தான் உண்ண வேண்டிய நிலைமை.
நான் சொல்லும் இந்த கதை முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பலரும் அறிந்த கதையே. இருந்த போதிலும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் தவம் குறியாகவே உள்ளார். அட்டாளைச்சேனை மக்கள் தேசியப்பட்டியல் கதையை மறைந்துள்ள நிலையில் தனது சார்பு ஊடகம் ஒன்றினூடாக இன்னும் சில நாட்களிலே அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளும் போது அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீமிடம் தேசியப்பட்டியல் பற்றி கேட்கவுள்ளதாக கதைகளை பரப்பி அட்டாளைச்சேனை மக்களிடையே தேசியப்பட்டியல் உணர்வை தூண்டி விடும் வேலையை செய்கிறார். அமைச்சர் ஹக்கீமிடம் நல்ல பிள்ளையாக நடிப்பதில் வல்லவர். இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீம் அறியாமல் இருக்குமளவு மடையனுமல்ல.
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கிடைத்தால் அது மாகாண அமைச்சர் நசீருக்கு கிடைக்கும். அவரது மாகாண அமைச்சு தனக்கு கிடைக்கும். அதனூடாக விரைவான சேவைகளை செய்து எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் தெரிவாவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிப்பதே தவத்தின் சிந்தனையாகும். தவம் என்ன தான் தவம் இருந்தாலும் அந்த தவத்துக்கு அமைச்சர் ஹக்கீம் ஒரு போதும் ஆட மாட்டார். தவத்தின் இந்த செயற்பாடு ஒரு வகையில் நோக்கும் போது சரியானதும் கூட. இருந்தாலும் அதனை வெளிப்படையாக கூற முடியாது தவிக்கின்றார்.
Related Posts:
நஷீர் ஹாபிஸ் பஷில் ராஜபக்ஸ பற்றி கதைப்பது ஏளனமானது (இப்றாஹீம் மன்சூர்) இன்று நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வில் நஷீர் ஹாபிஸ் பஷீர் செகுதாவூதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர் பஷில் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக செயட்பட்டவராக மக்களிடையே க… Read More
மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்து அமைச்சர்களான றிஷாட் மற்றும் கல்வி அமைச்சர் சந்திப்பு..!! சுஜப் எம்.காசிம். தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு… Read More
“சல்மானே தேசியப்பட்டியலுக்கு தகுதியானவர்” போராளிகளை வைத்து கூறும் ஹக்கீம் (இப்றாஹீம் மன்சூர்) சல்மானிடமுள்ள தேசியப்பட்டியல் அதற்கு சொந்தமானவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கருத்து எழும் போதெல்லாம் சல்மானும் தேசிய… Read More
அட்டாளைச்சேனை ஹசனலி முரண்பாடே ஹக்கீமின் முதலீடு (இப்றாஹீம் மன்சூர் : கிண்ணியா) பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஹக்கீம் செய்விக்க வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகி வருகிறது.இங்கு அனைவரும் ஒரு வ… Read More
பஷீரின் அதிர்வு நேற்று 2017-01-29ம் திகதி வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் கலந்து கொண்டிருந்தார்.இந் நிகழ்வில் அவர் மு.காவின் இரகசியங்கள் பலவற்றை கூறிச் சென்… Read More
0 comments:
Post a Comment