அம்பாறையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த அமைச்சர் றிஷாத்
(ஹபீல் எம்.சுஹைர்)
அம்பாறை மாவட்டத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாத் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. இதற்கு முன்பு அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது காணக்கிடைக்காத பல புதுமுக ஆதரவாளர்கள் இம் முறை கலந்து கொண்டமையே இதிலுள்ள விசேடமாகும்.
அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாதின் துணிவுமிக்க பேச்சுக்கள் பலரை கவர்ந்தமையே புதுமுக ஆதரவர்களின் பிரசன்னத்துக்கு காரணம் என அங்கு வருகை தந்திருந்த புது முக ஆதரவாளர்களிடம் பேசக் கிடைத்த போது அறிந்து கொள்ள முடிந்தது. இதன் பிறகு ஊமைத் தலைவர்களின் கட்சிகளை ஆதரிக்காமல் அஷ்ரப் பாணியில் மிக இளம் வயதில் துணிவுமிக்க அரசியல் பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் றிஷாத்துடன் அவர்கள் தொடர்ந்து பயணிக்க போவதாக உறுதி மொழி வழங்கினர்.
இவரது இரு நாள் விஜயங்களின் போது ஒன்று கூடிய மக்கள் எண்ணிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆதரவானது பல மடங்கால் அதிகரித்துள்ளதை துல்லியமாக்கியுள்ளது. இதன் பிறகு மு.காவின் ஆதரவாளர்கள் யாருமே நிம்மதியாக தூக்க மாட்டார்கள் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.
.

Sunday, June 11, 2017
Home »
srilankan news
»
Related Posts:
அமைச்சர் ஹக்கீம் சுவிஸ் லொக்கறை திறந்து காட்டுமாறு சவால் விடுவாரா? ( ஹபீல் எம்.சுஹைர் ) அமைச்சர் ஹக்கீம் பற்றிய சில முக்கிய இரகசிய ஆவணங்கள் மு.காவின் முன்னாள் தவிசாளரிடமிருப்பதான கதைகள் பல காலம் தொட்டு சென்றிகொண்டிருக்கின்ற… Read More
இனவாதிகள் விடயத்தில் அரசை காப்பாற்ற முன்பு கூறிய உண்மையை மறுக்கும் ஹக்கீம் 21-05-2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஹக்கீம் காத்தான்குடி நூரானியா மையவாடி சுற்று மதிளினை கையளிக்கும் நிகழ்வில் இனவாதிகளின் இன்றைய செயற்பாடுகள… Read More
ஒரு சமூகத்தின் தலைவனது நோன்பு நாள் ஒன்று...! இது நோன்பு மாதம்...அதிகாலை மூன்று மணிக்கு ஸஹருக்கு எழுந்து, நோன்பு வைத்து, பஜ்ர் தொழுது முடித்துக் கொஞ்சம் தூங்கலாமென எண்ணித் தலையைச் சாய்த்தால், தொலைபேசி அலறுகிறது. ''முஸ்ல… Read More
நுகேகொட பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட்! இன்று அதிகாலை நுகேகொட பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய கடை தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. உரிமையாளரின் சில முன்னேடுப்புகள் காரணமாக பல லச்ச ரூபா பெறுமதியான சொத்துக… Read More
நல்லாட்சியின் எனும் பேயாட்சி எமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளினூடாகவும் பலவிதமான படிப்பினைகளை பெற்றுக்கொள்ளலாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டி கொண்டு வந்த ஆட்சிக்கு நல்… Read More
0 comments:
Post a Comment