Pages

.

.

Tuesday, June 6, 2017

ஒரு சமூகத்தின் தலைவனது  நோன்பு நாள் ஒன்று...!

இது நோன்பு மாதம்...அதிகாலை மூன்று மணிக்கு ஸஹருக்கு எழுந்து, நோன்பு வைத்து, பஜ்ர் தொழுது முடித்துக் கொஞ்சம் தூங்கலாமென எண்ணித் தலையைச் சாய்த்தால், தொலைபேசி அலறுகிறது. ''முஸ்லிம் ஒருவரின் கடைக்குத் தீ வைத்து விட்டார்கள்...''

உடனே எழுந்து உடுத்தியிருந்த அதே சாரத்துடன் காரிலேறிக் குறிப்பிட்ட இடம் வந்து, கடைக்குச் சொந்தமானவரிடம் விபரங்கள் கேட்டு, போலீஸ் மா அதிபருக்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் நடந்த அநியாயத்தைப் பற்றி உறக்கப் பேசி நியாயம் கேட்டு, தக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி விட்டு வீட்டுக்குப் போனால், மண் சரிவால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரியிலிருந்து தகவல் வருகிறது. அவசர அவசரமாகக் குளித்து முடித்து, ஆடை மாற்றிக் கொழும்பிலிருந்து இரத்தினபுரி போய் அங்கு நிவாரணப் பணிகளைக் கவனித்துவிட்டு, அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பித்து மீண்டும் கொழும்புக்கு வந்து, அமைச்சுக்குப் போய் அலுவல்களைக் கவனித்து, லுஹர் தொழுது, பாராளுமன்றம் போய் அங்கே, நாட்டில் முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயங்கள் பற்றி யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்தி , ''நான்கு போலீஸ் குழுக்களை அமைத்து இனவாதியைப் பிடிப்பதாகச் சொல்கிறீர்களே, இன்னும் அவரைப் பிடிக்காமலிருக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா...?'' என ஆக்ரோஷமாகக் குரலெழுப்பி, சீற்றத்துடன் சிங்கமாய்க் கர்ஜித்து வெளியே வந்து, அஸர் தொழுத பின்னர் தமிழ் பேசும்  மக்கள் விடயமாக அந்த வெளிநாட்டுத் தூதுவருடன்  உரையாடி முடிக்கையில்,  சில முக்கியஸ்தர்கள் வந்து 'தோப்பூரில் தொல்பொருள் என்று கூறி தமிழ்,முஸ்லிம்களின் காணிகளை துவேஷம் கொண்ட சிலர் அபகரிக்கப் பார்க்கிறார்கள்.' என்று சொல்ல, உடனடியாகவே அது சம்பந்தமாக உரிய திணைக்களங்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கி நோன்பு திறக்க வீடு வந்தால், வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏழைகளும் தேவையுடையோர் பலரும். அவர்களிடம் அன்பாகப் பேசி நோன்பு திறக்க வைத்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்த பின்னர் மக்ரிப் தொழுது முடிக்க, மட்டக்களப்பில் ஒரு சமூக சேவகரின் மரணச் செய்தி வருகிறது. இன்னா லில்லாஹி என்று கூறி, அவசரமாகப் போகும் வழியில் இஷாவைத் தொழுது, அங்கு போய்த் தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி, ஜனாஸா நல்லடக்கத்திலும் கலந்துவிட்டு, வரும் வழியில் ஸஹர் செய்து வீடு வந்து சுப்ஹு தொழுது, கண்ணை மூடிக் கொஞ்ச நேரம் படுக்கலாமென்று பார்த்தால்....தொலைபேசி ஒலிக்கிறது!

எங்கள் தலைவரே... றிசாத் பதியுதீனே...

காமமும் தூக்கமும் விஸ்கியும் ஓய்வுமாகப்  பலர் தம்மையும்  தலைவர்களெனச் சொல்லிக் கொண்டு வாழும் இந்த உலகில், தனது வாழ்வையே இந்தச் சமூகத்துக்காக அர்ப்பணித்து வாழ்கின்ற உங்களுக்கான நற்கூலியை அந்த இறைவன் நிச்சயம் தருவான். இன்ஷா அல்லாஹ்...!





Related Posts:

  • Two Sri Lankan women to be deported from Kuwait Farwaniya police recently arrested eight women, including two Sri Lankans, reported absconding by their employers, according to the Kuwait Times.  The eight also includ… Read More
  • அஷ்ஷஹீத் அஷ்ரப் தன்னை விளம்பரப்படுத்த சேவைகள் செய்தாரா? """"""""""""""""""""""""""""""""""" முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மாமனிதர் அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்கள் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் நாடுபூராகவும் தனது ஆளுமையி… Read More
  • இனவாதிகளின் கூற்று மைத்திரியின் ஆலோசனையானது இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது வில்பத்து சரணாலய பிரதேசத்தை மேலும் விரிவாக்கி,வனவிலங்குகள் வ… Read More
  • ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் கூற்றானது அவரை ஜனாதிபதியாக்க உதவிய முஸ்லீம் சமூகத்திற்கு  செய்யும் துரோகமாக மாறியுள்ளது....... இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதி… Read More
  • மஹிந்த செய்த தவறை முஸ்லிம்கள் விடயத்தில், இந்த அரசும் செய்யக்கூடாது - றிசாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமா… Read More

0 comments:

Post a Comment