ஏவல் நாய்களே மின்னலில் குரைக்கின்றன
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
கடந்த மின்னல் நிகழ்ச்சியில் அமைச்சர் றிஷாதிற்கு எதிரானவர்களை அழைத்து வந்த ரங்கா அவர்களோடு தானும் சேர்ந்து அமைச்சர் றிஷாதை கழுவி ஊத்தி இருந்தார்.இதில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு நோக்கங்கள் இருக்கலாம்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்காவிற்கும் அமைச்சர் றிஷாத்திற்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பது யாவரும் அறிந்ததே! இன்னும் சொல்லப் போனால் ஒரு தடவை இவர்கள் இருவருக்குமிடையில் பிரச்சினை முற்றி கை கலப்பிலும் நிறைவுற்றது.நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாராம் ரங்கா (இது உண்மைச் சம்பவம்).இந்த அடி எத்தகையது? இதன் தாக்கம் என்ன? என்பதை வை.எல்.எஸ் ஹமீத் நன்கே அறிவார்.தான் அடி வாங்கியதை வெளியில் சொன்னால் கேவலம் என்பதால் அடிபட்ட பட்ட பாம்பு பழி தீர்க்க படம் எடுக்கின்றது.அவர்களோடு சேர்ந்து இன்னும் சிலரும் ஆடுகின்றனர்.
இவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் ஆடுவது தெளிவானது.இதனை அறிய நாம் ஒரு விடயத்தை எடுத்து நோக்கலாம் என்று நினைக்கின்றேன்.அமைச்சர் ஹக்கீமின் வாழ்வில் இடம்பெற்ற தனிப்பட்ட விடயங்களில் ஒன்றான குமாரி விவகாரத்தை அமைச்சர் றிஷாத் சோடனை செய்தது போன்று மக்கள் மத்தியில் இவர்கள் காட்ட முனைந்ததை இந் நிகழ்வினூடாக அவதானிக்க முடிந்தது.தற்காலத்தில் அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவத்தை குமாரி குரே விவகாரம் அசைத்துக்கொண்டிருக்கின்றது.இது தொடர்பில் தெளிவான ஆதராங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போது இச் சம்பவத்தை எவ்வாறு சோடனை செய்யப்பட்ட சம்பவமாக கூற முடியும்.இச் சம்பவத்தை அமைச்சர் ஹக்கீம் உயர்பீடக் கூட்டத்தில் கூட ஏற்றுக்கொண்டிருந்தார்.செய்தவர் ஏற்றுக்கொண்டாலும் ரங்காவும் அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ள மறுப்பதே இது என்ன மாதிரியான நிகழ்ச்சி நிரல் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.
அமைச்சர் றிஷாதுடன் வை.எல்.எஸ் ஹமீத் ஒட்டி உறவாடிய போது மின்னல் ரங்காவை மின்னலில் வைத்தே விளாசி தள்ளி இருந்தார்.இப்போது கட்டிப் பிரள்கின்றனர்.ரங்கா ஏன் அமைச்சர் றிஷாதிற்கு எதிராக கதைக்கின்றார் என்பதற்கு வை.எல்.எஸ் ஹமீத் அந் நிகழ்வில் நன்றாகவே அதில் பதில் அளித்திருந்தார்.இவ்வாறு இருக்கையில் தற்போது இவருடன் கை கோர்த்து அமைச்சர் றிஷாதிற்கு எதிராக செயற்படுவது போன்று கேவலம் வேறு எதுவுமல்ல.எலும்பில்லா நாக்கு என்பதற்காக விரும்பிய திசையில் எல்லாம் மாற்றி கதைப்பது சிறந்ததா? அமைச்சர் றிஷாதிற்கு எதிராக செயற்படுகிறார் என்பதற்காக மாத்திரம் இவரை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை.ஒரு தடவை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் ரங்காவை முஸ்லிம்களின் விரோதியாக பகிரங்கமாகவே விமர்சித்திருந்தது.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைச்சர் றிஷாதின் அணியல்ல என்பதை அடித்துக் கூறலாம்.இவர்கள் ஏன் எதிர்த்தார்கள்? இன்று இவர்கள் போன்ற சுயநல வாதிகள் ரங்காவுடன் கை கோர்த்து செயற்படுவதன் காரணமாகவே இந் நிகழ்வு பிரபல்யமாகிறது.நாளை இந்த பிரபல்யம் முஸ்லிகளுக்கு எதிராக திரும்பும்.அப்போது இவர்களைப் போன்றவர்கள் தான் வகை கூற வேண்டும்.
.

Wednesday, March 29, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஹசனலி பதுங்குகிறாரா? பணிந்தாரா? அரசியலில் இன்று என்ன நடக்கும் நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.அரசியல் வாதிகள் இன்று அடித்துக் கொள்வார்கள் நாளை அணைத்துக் கொள்வார்கள்.இவர்களை நம்பி பின்னால் சென்றவர்கள் தான் … Read More
மயிலின் வளர்ச்சியால் கருகி சாகும் மரங்கள் மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்துக்காக அம்பாறை மாவட்ட மக்களின் முழு ஆதரவுடன் பல போராட்டத்துக்கு மத்தியில் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் … Read More
மட்டு மங்கலாராம விஹாராதிபதியை மாற்ற வேண்டும்! மட்டக்களப்பில் இனங்களிடையே முறுகல் நிலை தோன்றக் காரணமாகவுள்ள மங்கலாராம விஹாராதிபதியை மாற்றி, வேறு ஒருவரை குறித்த விஹாரைக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதியமைச்ச… Read More
Fatal fire: Sri Lankan refugee advocate loses son, wife and mother-in-law in blaze Three generations of the family of a prominent New Zealand refugee advocate have died in fatal house fire in South Auckland earlier today,… Read More
லசந்தவுடனான சர்ச்சைக்குரிய உரையாடல் குறித்து பதிலளித்த மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றை, அண்மையில் பிரப… Read More
0 comments:
Post a Comment