ஜப்பார் அலி மீது ஹக்கீமிற்கு திடீரென வந்தது பாசமா? வேசமா?
அமைச்சர் ஹக்கீம் நிந்தவூரிலே ஹசனலியினால் தனக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பை சமாளிக்க ஹசனலியின் சகோதரரான ஜப்பார் அலியை தனது ஆயுதமாக பயன்படுத்துவதை அவர் அறிகிறாரோ இல்லையோ நாம் சில விடயங்களை வைத்து அறிந்து கொள்ளலாம்.
நிந்தவூரிலே அமைச்சர் ஹக்கீம் விழா நடாத்துவதொன்றும் புதிதான விடயமல்ல.ஜப்பார் அலி என்பவர் நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளானுமல்ல.அவருக்கு இது வரை எந் நிகழ்வுகளில் முக்கிய கதா பாத்திரம் வழங்கப்பட்டதில்லை.எப்போதும் கூட்டங்களில் நாலோடு ஐந்தாகவே இருப்பார்.
ஆனால்,இன்று நிந்தவூரிலே நடாந்த நிந்தவூர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜப்பார் அலி தலைமையில் இடம்பெற்றுள்ளது.இதற்கு முன்பும் அவர் கட்சியில் இருந்தார் தானே! அவர் அஷ்ரப் காலத்து மூத்த போராளியும் கூட.ஏன் அவருக்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை? நிந்தவூரில் பிரதி அமைச்சர் பைசால் காசிம்,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் அரசியல் அதிகாரங்களோடு இருக்கும் போது ஜப்பார் அலி தலைமையில் இக் கூட்டத்தை நடாத்த காரணம் என்ன? ஜப்பார் அலியை உருவேற்றினால் தானே ஆட வைக்கலாம்.
அமைச்சர் ஹக்கீம் சகோதர் இருவருக்குமிடையில் பிரச்சினையை மூட்டிவிட்டு தனது விடயத்தை சாதிக்க முனைகிறார்.இதனை ஜப்பார் அலி புரிந்து கொள்ள வேண்டும்.இங்கு சகோதர உணர்வை அமைச்சர் ஹக்கீம் அரசியலுக்கு பயன்படுத்த சிந்திக்கின்றார்.ஜப்பார் அலிக்கு நிந்தவூர் தவிசாளர் ஆசை அல்லது மாகாண சபை வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கலாம்.தனது சகோதரனுக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதி வழங்கி ஏமாற்றியது போன்று அவரும் ஏமாற்றப்படலாம்.இதில் பிளவு படப்போவது ஒரு குடும்பம்.தூய்மையான அரசியலுக்காக குடும்ப உறவுகளை இழக்கலாம்.இச் சாக்கடை அரசியலுக்காக குடும்ப உறவுகளை இழப்பதா? என்பதை ஜப்பார் அலி அவர்களே!ஒரு கனம் நிதானமாக சிந்தியுங்கள்.
அபு ரஷாத் (அக்கரைப்பற்று)
.

Saturday, March 4, 2017
Home »
srilankan news
»
Related Posts:
மஹிந்த செய்த தவறை முஸ்லிம்கள் விடயத்தில், இந்த அரசும் செய்யக்கூடாது - றிசாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமா… Read More
Two Sri Lankan women to be deported from Kuwait Farwaniya police recently arrested eight women, including two Sri Lankans, reported absconding by their employers, according to the Kuwait Times. The eight also includ… Read More
அஷ்ஷஹீத் அஷ்ரப் தன்னை விளம்பரப்படுத்த சேவைகள் செய்தாரா? """"""""""""""""""""""""""""""""""" முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மாமனிதர் அஷ்ஷஹீத் அஷ்ரப் அவர்கள் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் நாடுபூராகவும் தனது ஆளுமையி… Read More
அமைச்சர் றிஷாதின் பித்தளை தொடர்பான அமைச்சர் ஹக்கீமின் குற்றச் சாட்டும் அமைச்சரவை பத்திரமும் அமைச்சர் றிஷாத் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.இதன் பின்னணியில் மு.காவைச் சேர்ந்த சிலரும் மு.… Read More
இனவாதிகளின் கூற்று மைத்திரியின் ஆலோசனையானது இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது வில்பத்து சரணாலய பிரதேசத்தை மேலும் விரிவாக்கி,வனவிலங்குகள் வ… Read More
0 comments:
Post a Comment