கிண்ணியாவில் அமைச்சர் றிஷாதின் ஆளுமை
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
அமைச்சர் றிஷாத் வடக்கு மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் கரிசனை கொண்டு அம் மக்களை மீள் குடியேற்றம் செய்து வருகிறார்.அம் மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்தும் வருகிறார்.அது போன்றே கிண்ணியாவில் அவரினால் உறுதியளிக்கப்பட்டவாறு குளிரூட்டப்பட்ட மருந்தக கெண்டைனர் ஒன்றையும் வழங்கியிருந்தார்.இது போன்று அவரது சேவைகளை அடிக்கிக் கொண்டே செல்லலாம்.இத்தனைக்கும் அமைச்சர் றிஷாத் மீள் குடியேற்ற அமைச்சரோ அல்லது நீர் வளங்கள் அமைச்சரோ அல்லது சுகாதார அமைச்சரோ அல்ல.அவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சை வைத்திருப்பவர்.இப்படியான ஒரு தலமைத்துவத்தையே எமது சமூகம் எதிர்பார்த்து தவம் கிடக்கிறது.மறைந்த தலைவர் அஷ்ரபிற்கு பிறகு பல விடயங்களில் தலைமைத்துவப் பண்பை அமைச்சர் றிஷாதிடம் இருந்து அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியாவில் தீவிரமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக குளிரூட்டப்பட்ட மருந்தக கெண்டைனர் ஒன்றின் தேவை உணரப்பட்டது.இதனை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மஹ்றூப் மற்றும் எம்.எஸ் தௌபீக் ஆகியோர் கொண்டு சென்ற போது அவர் பத்து நாட்களின் பின்பே இதனை தன்னால் கையளிக்க முடியும் என கூறியிருந்தார்.அது வரை காத்திருக்க முடியாத நிலை கிண்ணியாவில் இருந்தது.இதன் போது தீவிரமாக செயற்பட்ட அமைச்சர் றிஷாத் அத தேவையை வேறு வழியில் பூர்த்தி செய்து கொடுத்தார்.சுகாதார அமைச்சுடன் தொடர்பான சேவையை சுகாதார பிரதி அமைச்சர் கை விரித்தத நிலையில் அமைச்சர் றிஷாத் செய்து கொடுத்தமை தான் அவரது ஆளுமையை பறை சாட்டுகிறது.
இக் கெண்டைனர் அமைச்சர் ஹக்கீம் கிண்ணியாவிற்கு விஜயம் செய்த நாளில் (ஞாயிற்றுக்கிழமை) கிண்ணியா வைத்தியசாலைக்கு வந்துள்ளது.இது அமைச்சர் ஹக்கீமிற்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியிருந்தது.இதில் நனைந்து கொள்ள மு.கா குழுவினர் முயன்ற போது அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் இவ்விடயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என கூறியுள்ளார்.இதன் போது “எல்லாவற்றையும் உங்கள் அமைச்சரை கொண்டு செய்யுங்கள்” என கூறியவாறு பிரதி அமைச்சர் பைசால் காசிம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.அவ்விடத்தில் குழுமி இருந்த உண்மை அறிந்த மக்கள் அமைச்சர் ஹக்கீமை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்திருந்தனர்.இதன் போது பலர் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக “கூ” போட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.இக் கெண்டைனரை தாங்கள் தான் கொண்டு வந்தோமென மு.கா அரசியல் வாதிகள் எவரும் உரிமை கோராத போதும் (அமைச்சர் றிஷாத் அணியினர் இது தங்களுடைய சேவையென பகிரங்கமான உரிமை கோரியுள்ளனர்) மு.காவின் ஆதரவாளர்கள் சில தங்கள் கட்சியின் மானத்தை காப்பாற்றிக்கொள்ள இத்தனை தங்களுடைய சேவைகள் போன்று காட்ட முற்படுவதை அவதானிக்க முடிகிறது.
இது தங்களது சேவையென மு.காவின் அடிமட்ட ஆதரவாளர்கள் சிலர் உரிமை கோரும் நிலைக்கு சென்றதால் நான் இக் கட்டுரையை எழுத தூண்டப்பட்டாலும் இவ்விடயத்தை செய்து கொடுக்க கூடிய அரசியல் அதிகாரங்கள் அமைச்சர் றிஷாதை விட அமைச்சர் ஹக்கீமிற்கு அதிகமாக இருந்த போதும் அமைச்சர் றிஷாத் அதனை செய்து கொடுத்துள்ளார்.தற்போது மு.காவிடம் உள்ள அரசியல் அதிகாரங்களான கிழக்கு முதலமைச்சு,மாகாண சுகாதார அமைச்சு,மத்திய சுகாதார பிரதி அமைச்சு ஆகியவை அமைச்சர் றிஷாதின் கையில் இருந்தால் இந் நேரத்தில் அவர் கிண்ணியாவின் நிலையை தலை கீழாக புரட்டி போட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.கிண்ணியா வைத்தியசாலையின் தேவைகளுக்காக அமைச்சர் றிஷாத் 7.9 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளார்.மு.காவினர் வெறும் ஒரு மில்லியன் ரூபாய்களை மாத்திரம் ஒதுக்கியுள்ளமையை நான் இங்கு மேலதிகமாக சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.இன்னும் இன்னும் நாம் எம் மீது அடிமை சாசனங்களை எழுதிக் கொள்ளாது சிறந்த தலைமைத்துவப் பண்புள்ள அமைச்சர் றிஷாதின் பின் அணிதிரள்வது காலத்தின் தேவை எனலாம்.
.

Thursday, March 23, 2017
Home »
srilankan news
»
Related Posts:
அமைச்சர் ஹக்கீம் இறக்காமத்திற்கு தடுக்க சென்றாரா அல்லது படம் காட்ட சென்றாரா? நேற்று அமைச்சர் ஹக்கீம் இறக்காம பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அவரின் முக நூல் பதிவில் பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபு மற்றும் &nbs… Read More
வடக்கு,கிழக்கு இணைப்பு பற்றிய முதலமைச்சரின் கூற்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது அமைச்சர் ஹக்கீம் ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களுக்கு பாதகாமான வகையில் அமையும் என்ற நிலை இருந்தும் புதிய… Read More
இறக்காமத்திலும் ஹக்கீமை நோக்கி கேள்வி கணைகள் தொடுத்த மக்கள் அமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம்,மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அங்கிர… Read More
அமைச்சர் ஹக்கீமின் யாப்பு மாற்ற அழைப்பில் தேர்தல் முறை மாற்றம் அமைச்சர் ஹக்கீம் இம் முறை இடம்பெற்ற ஐ.தே.கவின் மே தின கூட்டத்தின் போது புதிதாக வரவுள்ள அரசியலமைப்புக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இதன… Read More
அமைச்சர் ஹக்கீம் அறிந்து பேசுகிறாரா? அல்லது அறியாமல் பேசுகிறாரா? நேற்று ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கை கோர்க்க வேண்டுமென கோர… Read More
0 comments:
Post a Comment