Pages

.

.

Monday, March 20, 2017

கிண்ணியாவில் ஐம்பது இளைஞர்களை கூட்டியதை வைத்து பெருமைப்படும் நிலையில் ஹக்கீம் காங்கிரஸ்

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

கிண்ணியாவில் தீவிரமாக பரவும் டெங்கு நோயை கட்டுப் படுத்தும் முகமாக மு.காவின் தலைவரின் விசேட வேண்டுகோளின் பெயரில் இளைஞர் காங்கிரஸின் அணர்த்த நிவாரண குழு கிண்ணியாவிற்கு சென்றிருந்தது.இவர்கள் சென்றமை பாராட்டுக்குரிய விடயமாக இருந்தாலும் இதில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து மு.கா எந்தளவு வீழ்ச்சிக்கு சென்றுள்ளது என்பதை ஓரளவு மட்டிட்டுக்கொள்ளலாம்.அமைச்சர் ஹக்கீமின் உத்தியோக பூர்வ முக நூலில் இதில் ஐம்பது உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கூறியிருந்தார்.இலங்கை பூராகவும் அழைப்பு விடுத்து வெறும் ஐம்பது பேரைத் தான் மு.காவால் ஒன்று கூட்ட முடிந்தமையானது மு.காவின் வீழ்ச்சி முகத்தை புடம் போட்டு காட்டுகிறது.கிண்ணியாவை சேர்ந்த ஐம்பது  இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தால் கூட அது போதுமான எண்ணிக்கையல்ல.இதில் நாடு பூராகவும் ஐம்பது ஐம்பது பேரைத் தான் ஒன்று கூட்ட முடிந்துள்ளமை மு.கா மக்களால் பூரமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

இதில் இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால் இதில் ஐம்பது பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்பதாகும்.இதில் 10-20 பேர் அளவிலானோரே கலந்து கொண்டுள்ளனர்.அதிலும் அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவில் பணியாற்றுபவர்களும் அதில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.இது தான் மு.காவின் சாதனையா? இதனை நீங்கள் நான் பதிவிட்டுள்ள புகைப் படங்களில் இருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.இப்படி கூட்டப்பட்ட இருபது பேர்களில் அதிகமானவர்கள் வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் தான்.இரண்டாவது நாள் இவர்களை பார்வையிட அமைச்சர் ஹக்கீம்,பிரதி அமைச்சர் பைசால் காசீம்,மாகாண அமைச்சர் நஸீர் சென்றும் வெறும் இருபது பேரே அவர்களுடன் இணைந்து புகைப்பட எடுத்திருந்தனர்.அமைச்சர் ஹக்கீம் வருகின்றார் என்றால் புதினம் பார்க்க பல்லாயிரக்கணக்கானோர் சென்ற காலம் போய் பத்து பேர் ஒன்று கூடும் காலம் வந்துள்ளது. இது இலங்கையில் மு.காவின் உண்மை முகத்தை மக்கள் நன்கு அறிந்து கொண்டதை துல்லியமாக்குகின்றது.இவ் எண்ணிக்கையான மக்களை ஒரு சிறிய உள்ளூர் அமைப்பினால் கூட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பெருமையாக அமைச்சர் ஹக்கீம் தனது முகநூலில் பதிவிடும் நிலைக்கு சென்றுள்ளமை தான் அவரது அரசியலின் வீழ்ச்சியை அடையாள படுத்தும் அளவு கோலாகும்.இவர்களின்




Related Posts:

  • ஹக்கீம் காங்கிரஸ்  சரிகிறது (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் எனும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.இப் புத்தக வெளியீட்டில் மு.காவின் பிரத… Read More
  • 12 மரணங்களின் பின் தான் ஹக்கீமிற்கு ஞானம் பிறந்ததா? (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கிண்ணியாவை உலுக்கி பார்க்கும் விடயமாக டெங்கு நோயானது மாறியுள்ளது.கள்ளன் சென்ற பின் நாய் குரைத்த கதையாக இப் பிரச்சினை இரு வாரங்களுக்கும் மே… Read More
  • ஜப்பார் அலி மீது ஹக்கீமிற்கு திடீரென வந்தது பாசமா? வேசமா? அமைச்சர் ஹக்கீம் நிந்தவூரிலே ஹசனலியினால் தனக்கு கிளம்பியிருக்கும்  எதிர்ப்பை சமாளிக்க ஹசனலியின் சகோதரரான ஜப்பார் அலியை தனது ஆயுதமாக பயன்படுத்துவதை அவர் அறிகிறாரோ… Read More
  • ஹுனைசின் குற்றச்சாட்டு ஹக்கீமின் வில்பத்து பொடு போக்கை காட்டுகிறது கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டையும் பிரதி அமைச்சர் ஹர… Read More
  • வடபுல முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் விளையாடும் மாற்றுக்கட்சி பிரதிநிதிகள்; இனியாவது சிந்திப்பார்களா? ஒலுவில் அஸ்ஹர். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் சுயலாபங்களை மட்டுமே தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக… Read More

0 comments:

Post a Comment