குவைதிர்கானின் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயல் தொடர்பான குற்றச் சாட்ட்டின் உண்மை முகம்
அமைச்சர் றிஷாதை ஏசுவதற்காகவே மு.காவினால் நிரந்தர கொந்தராத்து வழங்கப்பட்டிருக்கும் குவைதிர்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கொந்தராத்துக்கமைய ஒவ்வொரு நாளும் சமூக வலைத் தளங்களில் அமைச்சர் றிஷாதிற்கு எதிரான குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகிறார்.அமைச்சர் றிஷாத் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயலில் பாரிய நிதி ஒன்றை கையகப் படுத்தியது போன்று இன்று ஒரு பதிவை இட்டிருந்தார்.அதில் அவர் சொன்ன அனைத்தும் புளுகுகளாகும் (இது தொடர்பான புள்ளி விபரங்களுடனான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.விரைவில் வெளியிடுவேன்.) .
குறித்த பள்ளிவாயலானது பல வருடங்களாக (அண்ணளவாக 25 வருடங்கள்) கட்டுவதற்கு போதியளவு நிதியில்லாமல் இருந்தது.குறித்த பள்ளிவாயலுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு அமைச்சர் றிஷாத் தனது சொந்த பணத்தில் இருந்து 1000 சீமெந்து பேக்குகளை வழங்கி இருந்தார்.இந் நிலையில் அப் பள்ளிவாயல் அப்படியே இருந்தது.இதனை பல அரபிகள் கூட பார்வையிட்டிருந்தனர்.இருந்தும் பயனேதுமில்லை.
இப் பள்ளிவாயலை மீள கட்டுவதற்கு உத்தேசித்த அமைச்சர் றிஷாத் ஓ.எச்.ஆர்.டி அமைப்பின் மூலம் தனது முயற்சிகளை செய்தார்.இதன் போது ஒரு தொகைப் பணம் குறித்த பள்ளிவாயலை கட்டுவதற்காக வேறு வழிகளில் கிடைத்திருந்தது.இது குறித்த பள்ளிவாயலை கட்டுவதற்கு போதுமானதாக இருக்கவில்லை.அப் பள்ளியை முடிப்பதற்கு தேவையான மீதிப் பணத்தை ஓ.எச்.ஆர்.டி அமைப்பே செய்திருந்தது.இவ் அமைப்பிடம் நான்கு கடைகள் கட்டிக்கொடுக்க வேண்டிக்கொள்ளப் பட்ட போதும் இவ்வமைப்பானது ஆறு கடைகளை கட்டிக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது இடம்பெற்ற பணப்பரிமாற்றங்கள் எதுவும் அமைச்சர் றிஷாதின் கைகளை சென்றடைய வாய்ப்பில்லை.ஒரு அமைப்பென்றால் அதற்கென்று பணப் பரிமாற்றங்களை கையாளுவதற்கான வழி முறைகள் இருக்கும்.ஓடிட் மூலம் பரிசோதனை செய்யப்படும்.இப்படியான அனைத்து முறைகளும் ஒழுங்கான முறையில் பின்பற்றப்படும் அமைப்பே இவ்வமைப்பாகும்.இவ்வமைப்பில் உள்ளவர்கள் அனைவர்களும் நன்கு படித்தவர்களும் முக்கியமான பதவிகளில் உள்ளவர்க்களுமாகும்.இவர்கள் இப்படியான கையகப்படுத்தல்களை அனுமதிப்பவர்களல்ல.இவர் அமைச்சர் றிஷாதை குற்றம் சாட்டுவதன் மூலம் பல நல்லுள்ளங்கள் கூட மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான துர்ச் செயல்கள் மூலம் நல்ல வேலைகளை முன்னின்று செய்யக் கூட பலர் இதன் பிறகு முன் வர மாட்டார்கள்.
இருபத்தைந்து வருடங்களாக கட்டப்படாமல் கிடந்த பள்ளிவாயலை அமைச்சர் றிஷாத் தனது முயற்சியினால் கட்டிக்கொடுத்திருந்தார்.அதனை பாராட்டாமல் விட்டாலும் பறவாயில்லை அதனைக் கூறியே அவரை தூற்ற முயற்சிப்பதைப் போன்ற இழி செயல் எதுவுமல்ல.இன்று கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் இவ்வாறானவர்களின் செயலால் நல்லது செய்ய அவர் ஏச்சும் கேட்க வேண்டும்.இதற்கெல்லாம் மனம் சோர்ந்து போபவர் எங்கள் அமைச்சர் றிஷாதல்ல.
இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன் வைக்கும் குவைதீர்கான் செய்யும் தொழில் என்ன என்று அவரிடம் கேட்டால் கூட இவரின் உண்மை (இழி) முகத்தை அறிந்து கொள்ளலாம்.இவர் சில காலங்கள் முன்பு அமைச்சர் றிஷாதின் மீது 13 குற்றச் சாட்டுக்களை முன்னிறுத்தி நீதி மன்றம் சென்றிருந்தார்.அவரின் குற்றச் சாட்டுக்களை நீதி மன்றமானது தனது சிறிய கவனத்திற்கும் கூட எடுத்துக்கொள்ள வில்லை.நீதி மன்றத்துடன் அமைச்சர் றிஷாத் மோத முடியாது.அதாவது இவரது இக் குற்றச் சாட்டில் எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இருக்கவில்லை என்பதே இது கூறும் செய்தியாகும்.
குவைதிர்கான்,தான் வாங்கும் பணத்திற்கு ஏதாவது கூற வேண்டும் என்பதற்காக ஏதாவதொன்றை ஒவ்வொரு நாளும் கூறி வருகிறார்.அது உண்மையானதா? பொய்யானதா? என சிந்திப்பதற்கு அவருக்கு நேரமுமில்லை அவசியமுமில்லை.இவரிடம் இக் குற்றச் சாட்டு தொடர்பான உண்மை ஆதாரங்கள் இருப்பின் மக்களை நாடாமல் நீதி மன்றம் சென்று நீதி தேடலாம்.நீதி தேடி நீதி மன்றம் சென்றால் அது எடுபடாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
அஹமட் சாஜித்
மாவடிப்பள்ளி
.

Monday, April 10, 2017
Home »
srilankan news
»
Related Posts:
பிரதி அமைச்சர் ஹரீஸ் எனது கருத்தை ஏற்றார் (இப்றாஹீம் மன்சூர்) சில நாட்கள் முன்பு நான் “பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலைதீவு சென்றிருக்க தேவையில்லை” என்ற கட்டுரையை எழுதியிருந்தேன்.அக் கட்டுரையில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த &n… Read More
IGP’s Sir could be anybody: Kiriella Anura K asks Law and Order Minister to reveal who the ‘Sir’ is The controversial cellular phone call to the Police Chief could have been from anybody, House Leader and Minister Lakshman… Read More
Antonio Guterres sworn in as new UN secretary-general Former Portuguese Prime Minister Antonio Guterres was sworn in Monday as Secretary-General of the United Nations, becoming the ninth U.N. chief in the body’s 71-year hi… Read More
தனது மௌனத்திற்கான காரணத்தை தோப்பூரில் வலுப்படுத்திய ஹக்கீம் (இப்றாஹிம் மன்சூர்) இலங்கையில் இனவாதம் மிக உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.தற்போது இவ்வரசின் மீது பலத்த விமர்சனங்கள் முஸ்லிம் தரப்புக்களிடமிருந்து வெளிவந்துகொண்டிருக்கி… Read More
*நல்ல பாம்பிற்கு பாலூட்டும் நல்லாட்சி* இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவை தோற்கடித்துருவான ஆட்சிக்கு அனைவரும் நல்லாட்சி என பெயர் சூட்டியழைத்தாலும் தற்போது அதனுடைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது இவ்வாட்சியை … Read More
0 comments:
Post a Comment