துரிதமாக கையாளப்பட வேண்டிய விடயத்தை ஆற அமற கையாளும் மு.கா
அமைச்சர் ஹக்கீம் நாளை வில்பத்து செல்லப்போகும் விடயம் அவரது ஊடகப் பிரிவை சேர்ந்தோரால் சில நாட்கள் முன்பே வெளியிட்டு அதனை பேசு பொருளாக்கி அரசியல் வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.அரசியல் செய்வதானால் பிரபலமும் வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.
இருந்தாலும் சில விடயங்களை நாம் சிந்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.2017.03.24 ம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் வடக்கில் உள்ள சில பிரதேசங்களை வர்தமாணிப்படுத்தளுக்கான கையொப்பம் பெறப்பட்டிருந்தது.இதனை கேள்வியுற்ற நாள் தொடக்கம் அங்குள்ள முஸ்லிம்கள் தூக்கமின்றி தவித்தனர்.
மு.கா குழுவினர் 2017.04.03ம் திகதி அரசின் உயர்மட்டக் குழுவை சந்தித்திருந்தனர்.ஜனாதிபதியின் கொயொப்பம் பெறப்பட்டு பத்து நாட்களின் பின்னராகும்.குறித்த வார்த்தமானிக்கு ஜனாதிபதியின் கையொப்பம் கிடைத்ததால் அது எந் நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில் பத்து நாட்கள் என்பது மிக நீண்ட தூரமாகும்.இதற்கு முன்பு அமைச்சர் றிஷாத் குழுவினர் அரசின் உயர்மட்ட குழுவை சந்தித்து பேச்சு நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2017.04.03ம் திகதி 2017.04.27ம் திகதி வில்பத்து சென்று பேச்சு நடாத்துவதாக முடிவு செய்யப்பட்ட.வர்த்தமாணி கையொப்பமிடப்பட்ட விடயத்திற்கு ஒரு மாதமளவான அவகாசம் என்பது மிக மிக நீண்ட காலமாகும்.இதனை உடனடியாக சூட்டோடு சூட்டாக செய்து கொள்ள மு.கா முயற்சித்திருக்க வேண்டும்.இக் கால இடைவெளியினுள் எதுவும் நடக்காது என குறித்த அரசின் உயர் மட்டத்தினர் மு.காவிடம் வாக்குறுதி அளித்திருக்கலாம் என்ற நியாயமும் உள்ளது.இந் நியாயத்தை கூறுவோர் கல்முனை வேலை பணியாக இடமாற்றத்தின் போது அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியினது மற்றும் இறக்காமம் சிலையை ஒரு வார காலத்தில் அகற்றுவேன் போன்ற வாக்குறுதிகளை நினைவூட்டுவது பொருத்தமானது.
இவற்றினூடாக நான் கூற வருகின்ற விடயம் மு.கா வில்பத்து விடயம் மிகத் துரிதமாக செயற்பட்டு தீர்க்க வேண்டிய தேவை இருந்தும் மந்தகரமாக செயற்பட்டது என்பதாகும்.
தொடரும்....
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
.

Wednesday, April 26, 2017
Home »
srilankan news
»
Related Posts:
வடபுல முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் விளையாடும் மாற்றுக்கட்சி பிரதிநிதிகள்; இனியாவது சிந்திப்பார்களா? ஒலுவில் அஸ்ஹர். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் சுயலாபங்களை மட்டுமே தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக… Read More
ஹக்கீம் காங்கிரஸ் சரிகிறது (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் எனும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.இப் புத்தக வெளியீட்டில் மு.காவின் பிரத… Read More
ஹுனைசின் குற்றச்சாட்டு ஹக்கீமின் வில்பத்து பொடு போக்கை காட்டுகிறது கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டையும் பிரதி அமைச்சர் ஹர… Read More
நிரந்தர பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தற்காலிகமானார் எல்.எம் இர்பான் பொத்துவில் பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக கடந்த ஒரு வருடமாக கடமையாற்றியிருந்தார்.இங்கு கடமையாற்றிக்கொண்டு அவர் இரண்டு நாள் அட்டாளைச்சேனை பிரதேச சபைய… Read More
வை.எல்.எஸ் ஹமீதிற்கு இப்றாஹீம் மன்சூரின் திறந்த மடல் (இப்ஹிறாம் மன்சூர்:கிண்ணியா) நேற்று இடம்பெற்ற ரங்காவின் மின்னல் நிகழ்ச்சியில் எனது பெயரை கூறி,என்னை நாட்டிற்கே அறிமுகம் செய்து வைத்தமைக்காக முதற் கண் இவ்விடத்தில் நன்றி க… Read More
0 comments:
Post a Comment