Pages

.

.

Monday, May 15, 2017

சீனாவில் காரியத்தில் கண்ணாக இருக்கும் ரணில்;ஹக்கீம்?



இலங்கைக்கு உதவும் நாடுகள் வரிசையில் முஸ்லிம் நாடுகளின் வகிபாகம் மிக முக்கியமானது.இவ்வாறான உதவிகளை முஸ்லிம் நாடுகளிடமிருந்து இலங்கை நாடு தொடர்ச்சியாக பெற வேண்டுமாக இருந்தால் இலங்கை முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இன்று இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகளை வெளியில் காட்டினால் நிச்சயம் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தி கொள்ளும்.இன்று இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பது சர்வதேசம் வரை சென்றுள்ளது.

இலங்கை நாடு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவிகளை பெற இலங்கை முஸ்லிம்கள் எங்களுடனே உள்ளார்கள் என நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது.அதற்கு இலங்கை முஸ்லிம் அரச தலைவர்கள் தன்னுடன் உள்ளார்கள் என நிரூபித்தால் அதுவே போதுமானது.

மர்ஹூம் அஷ்ரபினால் மு.காவானது சர்வதேசம் வரை பெயர் பெற்ற ஒரு கட்சியாகும்.அந்த கட்சியின் தலைவர் எங்களுடன் உள்ளார் என நிரூபித்தால் அது மிகப் பெரும் சான்றாகிவிடும்.தற்போது சீன சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்குடன் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளார்.இதன் போது அமைச்சர் ஹக்கீமை அறிமுகம் செய்து மகிழ்ந்து கொள்கின்றனர்.

*இங்கு அமைச்சர் ஹக்கீம் மூலமாக இலங்கை முஸ்லிம்கள் எங்கள் ஆட்சியுடனேயே உள்ளார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலங்கை முஸ்லிம்கள் விற்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்*.இதற்கு அமைச்சர் ஹக்கீம் துணை போகிறார்.இது சர்வதேச நிகழ்வொன்று என்பதால் இன்னும் பல இடங்களில் இது போன்ற வியாபாரங்கள் இடம்பெறும்.இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் நிலைமை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது உலக முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் காதுகளினுள் இலங்கை முஸ்லிம்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்கின்றார்கள் என்ற செய்தியையே கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது.அதற்கு அமைச்சர் ஹக்கீமின் இவ்வாறான பயணங்கள் தடையாக அமையும் என்பதே யதார்த்தமாகும்.வெளிநாட்டு முஸ்லிம் தனவந்தர்கள் கட்டிக் கொடுத்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அமைச்சர் ஹக்கீம் இவற்றையாவது சாதித்து வருவாரா?  சீனாவிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது காரியத்தில் கண்ணாக உள்ளார்;அமைச்சர் ஹக்கீம்..?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Related Posts:

  • கண்டியாப்பால் கதிகலங்கி நிற்கும் றவூப் ****************  ##ஹக்கீம் ************** கண்டியில் நடைபெற்ற பேராளர் மாகாநாட்டில் பெளத்து வரை கட்சியின் தலைவனாக இருக்க வேண்டும் என்று யாப்பில் செய்த மாற்றம் இன்று கட்சியை அழிவுப… Read More
  • President seeks explanation on IGP's phone call President Maithripala Sirisena told Parliament today that he had called for an explanation from IGP Pujith Jayasundara regarding a video in which he had been reportedly spea… Read More
  • குவைதிர்கானின் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயல்  தொடர்பான குற்றச் சாட்ட்டின் உண்மை முகம் அமைச்சர் றிஷாதை ஏசுவதற்காகவே மு.காவினால் நிரந்தர கொந்தராத்து வழங்கப்பட்டிருக்கும் குவைதிர்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள … Read More
  • சமுதாயத்துக்காக துணிந்து அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,,.... அன்று முஸ்லிம் சமுதாயம் அரசியல் அனாதைகளாக இருந்ததை உணர்ந்த மறைந்த தலைவர் அஸ்ரப் தனது சமுகத்தின் விடிவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியை ஆரம்ப… Read More
  • Jaliya Wickramasuriya further remanded Former Sri Lankan Ambassador to the USA Jaliya Wickramasuriya was further remanded till December 16 by Colombo Fort Magistrate Lanka Jayaratne. He was arrested by the Financial Crim… Read More

0 comments:

Post a Comment