Pages

.

.

Tuesday, May 2, 2017

அமைச்சர் ஹக்கீம் அறிந்து பேசுகிறாரா? அல்லது அறியாமல் பேசுகிறாரா?

நேற்று ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கை கோர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.இது பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

தற்போது வரவுள்ள அரசியலமைப்பில் முஸ்லிம்களுக்கு சாதகமான எந்தவொரு விடயமும் வர வாய்ப்பில்லை.தற்போதுள்ளது போன்று அரசியலமைப்பு இருப்பதே சிறப்பு என்பதே முஸ்லிம்கள் பலருடைய நிலைப்பாடு.வடக்குடன் கிழக்கு இணைப்பு,தேர்தல் முறை மாற்றம்,ஜானாதிபதி ஆட்சி  முறைமை  உட்பட பல விடயங்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் வகையிலான மாற்றம் வரலாமென முஸ்லிம்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.இந் நிலையில் அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் ஹக்கீம் கூறுவதை நோக்கும் போது அவர் அறிந்து பேசுகிறார்? அல்லது அறியாமல் பேசுகிறாரா என சிந்திக்க தோன்றுகிறது.

இக் கூற்றினூடாக அமைச்சர் ஹக்கீம் யாரை திருப்தி செய்ய முனைகிறார் ? *அமைச்சர் ஹக்கீம் எம்முடன் இணையுங்கள் என கூறுவதன் மூலம் இவ் அரசியலமைப்பு வரைபின் பின்னணியில் அவர் முக்கிய வகிபாகம் வகிப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.*இவ் அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாதகமாக வரலாம் என்பது பலருடைய கருத்து.மு.காவின் முக்கியஸ்தர்கள் அமைச்சர் ஹக்கீம் இந்தியா “றோ” இடம் இருந்து பணம் வாங்கியதாகவும் கூறியுள்ளனர்.இவற்றையெல்லாம் தொடர்பு படுத்தி பார்த்தால்  *இவ் அரசியலமைப்பு வரைபில்,தமிழர்கள் சாதகாமான நிலைப்பாட்டை எட்ட,அது முஸ்லிம்களுக்கு எதிராக அமையும் என்ற நிலை இருந்தும் அமைச்சர் ஹக்கீம் பணியாற்றுகிராரோ என்று சிந்திக்க தோன்றுகிறது.*

நான் கூறுவது பிழை என்று வைத்து கொள்வோம்.மாற்றம் பெறவுள்ள அரசியமைப்பினூடாக அப்படி என்ன நன்மை வரவுள்ளது என்பதை அமைச்சர் ஹக்கீம் தரப்பினர் மனச் சாட்சியை முன்னிறுத்தி விளக்குவார்களா?

இறக்காமத்தில் வைக்கப்பட்ட சிலையை அகற்ற ஜனாதிபதி மைத்திரியை நாடிய அமைச்சர் ஹக்கீம் மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மேடை ஏறியுள்ளார்.இதனை ஜனாதிபதி மைத்திரி  பார்த்தால் இவருக்கு ஆதரவளிப்பது நமக்கு ஆபத்தானது என சிந்திக்க மாட்டாரா? இன்று ரணிலும் மைத்திரியும் இணைந்து ஆட்சி நடாத்தினாலும் கட்சி வேறு தான்.

இறக்காம சிலை வைப்பு விடயத்தை கையாள அமைச்சர் ஹக்கீம் பிரதமர் ரணிலை அணுகியதாக எந்த செய்திகளுமில்லை.ஆனால்,அமைச்சர் ஹக்கீம் அவருடனேயே அதிகம் தொடர்பில் உள்ளதை பலவற்றை சுட்டி காட்டுவதனூடாக விளக்க முடியும்.சிலை வைப்பில் அமைச்சர் தயா சம்பந்தப்படுவதால் இவ்விடயத்தை பிரதமர் ரணிலின் கையில் வழங்குவதே பொருத்தமானது.அதற்கான தொடர்புகளும் அமைச்சர் ஹக்கீமுடன் உள்ளன.இருந்தும் மைத்திரியுடன் ஒப்படைத்ததன் காரணம் என்ன? இவற்றை சிந்தித்தாலே அமைச்சர் ஹக்கீமின் ஏமாற்று வித்தைகளை அறிந்து கொள்ளலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Related Posts:

  • குவைதிர்கானின் மன்னார் பெரியகடை முஹையதீன் ஜும்மா பள்ளிவாயல்  தொடர்பான குற்றச் சாட்ட்டின் உண்மை முகம் அமைச்சர் றிஷாதை ஏசுவதற்காகவே மு.காவினால் நிரந்தர கொந்தராத்து வழங்கப்பட்டிருக்கும் குவைதிர்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள … Read More
  • மாணிக்கமடு சர்ச்சையை தீர்க்கவேண்டிய முழுப்பொறுப்பும் அம்பாறை அரசியல் அதிகாரமுள்ள மு.காவுக்கே உள்ளது.. அம்பாறை மாவட்டத்தில் மு.கா பலத்த அரசியல் அதிகாரங்களுடன் உள்ளது.அங்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் இருவர் … Read More
  • சமுதாயத்துக்காக துணிந்து அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,,.... அன்று முஸ்லிம் சமுதாயம் அரசியல் அனாதைகளாக இருந்ததை உணர்ந்த மறைந்த தலைவர் அஸ்ரப் தனது சமுகத்தின் விடிவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியை ஆரம்ப… Read More
  • மு.காவின் நாற்றம் முஸ்லிம்களுக்கு கேடு இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம… Read More
  • கண்டியாப்பால் கதிகலங்கி நிற்கும் றவூப் ****************  ##ஹக்கீம் ************** கண்டியில் நடைபெற்ற பேராளர் மாகாநாட்டில் பெளத்து வரை கட்சியின் தலைவனாக இருக்க வேண்டும் என்று யாப்பில் செய்த மாற்றம் இன்று கட்சியை அழிவுப… Read More

0 comments:

Post a Comment