அமைச்சர் ஹக்கீமின் யாப்பு மாற்ற அழைப்பில் தேர்தல் முறை மாற்றம்
அமைச்சர் ஹக்கீம் இம் முறை இடம்பெற்ற ஐ.தே.கவின் மே தின கூட்டத்தின் போது புதிதாக வரவுள்ள அரசியலமைப்புக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இதன் போது புதிதாக வரவுள்ள அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றம் வரவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
தற்போதுள்ளது போன்ற தேர்தல் முறையே முஸ்லிம்களின் பிரநிதித்துவ காப்புக்கு சிறந்தது என்பது இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம்.அப்படி இருக்க இவர் அதனை கூறியே அழைப்பு விடுத்தமை எதற்காக? அனைவரும் கெடுதி உள்ளதெனும் போது அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் நலவு உள்ளது என்கின்றார் என்றால் அதில் அமைச்சர் ஹக்கீமுக்கு மாத்திரம் நலவு உள்ளது என்பதுவே உண்மை.அவர் இன்று ஆதரவு வழங்க கோரும் தேர்தல் முறை மாற்றம் முஸ்லிம்களுக்கு பாதிப்பானதென பல இடங்களில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தேர்தல் முறைமை ஏற்படுத்தப்படும் போது கண்டி மாவட்டத்தில் தனக்கு வாசியான வகையில் ஒரு தொகுதியை அமைத்து அதில் தன்னையே ஐ.தே.க சார்பாக போட்டியிடச் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் ஒன்றை செய்தால் இன்று அவரது அரசியலுக்குள்ள பாரிய சவால்களை மிக இலகுவாக எதிர்கொண்டு விடுவார்.
அமைச்சர் ஹக்கீமுக்கு கண்டி மாவட்டத்தில் சொல்லுமளவு வாக்கு வங்கி இல்லை.இம் முறை ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குக்களில் நனைந்து கொண்டார் என்பதே உண்மை.இவ்வாறு செய்வதனூடாக தொடர்ச்சியாக தனது அரசியல் தெரிவை அவரால் உறுதி செய்ய முடியும்.
தொகுதி முறை வருகின்ற போது இன்று அவருக்கு பெருந் தலையிடியை வழங்கி வரும் அமைச்சர் றிஷாத் பாராளுமன்றம் தெரிவாவது கடினமாகிவிடும்.வன்னி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு தொகுதியை ஏற்படுத்தினால் வன்னி மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ளலாம்.இதனூடாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றம் செல்ல முடியும்.வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தெரிவாகும் வழியை தடுத்து விட்டால்...?
*அமைச்சர் ஹக்கீம் தனது சுயநலங்களை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் சமூகத்தையே பலி கொடுக்க தயாராகவுள்ளார்.*இது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
.

Monday, May 8, 2017
Home »
srilankan news
»
Related Posts:
ஹக்கீம் காங்கிரஸ் சரிகிறது (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் எனும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.இப் புத்தக வெளியீட்டில் மு.காவின் பிரத… Read More
வடபுல முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் விளையாடும் மாற்றுக்கட்சி பிரதிநிதிகள்; இனியாவது சிந்திப்பார்களா? ஒலுவில் அஸ்ஹர். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் சுயலாபங்களை மட்டுமே தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக… Read More
12 மரணங்களின் பின் தான் ஹக்கீமிற்கு ஞானம் பிறந்ததா? (இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கிண்ணியாவை உலுக்கி பார்க்கும் விடயமாக டெங்கு நோயானது மாறியுள்ளது.கள்ளன் சென்ற பின் நாய் குரைத்த கதையாக இப் பிரச்சினை இரு வாரங்களுக்கும் மே… Read More
ஜப்பார் அலி மீது ஹக்கீமிற்கு திடீரென வந்தது பாசமா? வேசமா? அமைச்சர் ஹக்கீம் நிந்தவூரிலே ஹசனலியினால் தனக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பை சமாளிக்க ஹசனலியின் சகோதரரான ஜப்பார் அலியை தனது ஆயுதமாக பயன்படுத்துவதை அவர் அறிகிறாரோ… Read More
ஹுனைசின் குற்றச்சாட்டு ஹக்கீமின் வில்பத்து பொடு போக்கை காட்டுகிறது கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டையும் பிரதி அமைச்சர் ஹர… Read More
0 comments:
Post a Comment